பண­மோ­ச­டி­யில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள்?

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் இரண்டு இடங்­க­ளில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள் பண­மோ­ச­டி­யில் ஈடு­பட்டனர் என்ற குற்றச்சாட்டை விசா­ரித்து நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தற்கு கணக்­குப் பரி­சோ­தனைக் குழு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக சமுர்த்தி வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்பட்டதாவது:

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் உள்ள சமுர்த்தி பண வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர் பண மோச­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார் என தெரி விக்கப்பட்டது.

தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் குழுக்­க­டன் மற்­றும் தனி­ந­பர் கடனை வசூல் செய்­யும் சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர் அந்­தப் பகு­தி­யில் உள்ள மக்­கள் பெற்­றுக் கொண்ட கடன் தொகை­யின் மாதப் பணத்­தினை பெறு­வ­தற்­குச் சென்­றுள்­ளார். பணத்தை வாங்­கிய பின்­னர் அவர்­க­ளுக்­கான பற்­றுச் சீட்டை வழங்­கா­மல் வந்­துள்­ளார். அத்­து­டன் நிறு­வ­னத்­தி­லும் அவர் பணத்தை ஒப்­ப­டைக்­க­வில்லை.

இந்த நிலை­யில் சமுர்த்தி வங்­கி­யால் பெற்ற கடன்­களைச் செலுத்­து­மாறு குறித்த மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதன்­போது குறித்த மக்­கள் தாம் பணம் செலுத்­தி­யதைத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள்.

இதன் பின்­னர் சமுர்த்தி முகா­மை­யா­ளர், கடன் வசூ­லிக்­கும் உத்­தி­யோ­கத்­தரை அழைத்து ‘‘குறித்த நபர்­கள் மாதாந்த கடன் தொகையை செலுத்தி உள்­ளார்­கள். ஆனால் இன்­ன­மும் வங்­கி­யில் அது பற்­றிய விவ­ரங்­கள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லையே’’ என்று வின­வி­ய­போது குறித்த கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தரால் 50 ஆயி­ ரம் ரூபா வரை­யில் மோசடி செய்­யப்­பட்­டது கண்­ட­றி­யப்­பட்டதாகக் கூறப்படுகிறது.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் உத்­தி­யோ­கத்­தர் மோசடி செய்த பணத்தை மீள வழங்­கி­யுள்­ள­ார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதே போன்ற சம்­ப­வம் ஊர்­கா­வற்­துறை ஜே/56 சமுர்த்­திப் பிரி­வி­லும் நடை­பெற்­றுள்­ளது.

இது தொடர்­பில் பிர­தேச செய­ல­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன் மாவட்­டச் செய­ல­கத்­தின் கணக்­காய்­வுப் பிரி­வும் குறித்த சம்­ப­வம் தொடர்­பில் மதிப்­பீ­டு­களை பெறு­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுத்­துள்­ள­து என தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like