மதப்­போ­தனை என்ற பெய­ரில் பெண்களிடம் மோசடி

மதப் போத­னை­க­ளில் கலந்து கொள்ள டுபாய்க்கு அனுப்­பு­வ­தா­கத் தெரி­வித்துச் சட்­ட­வி­ரோ­த­மாகப் பெண்­களை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­வந்த குற்­றச்­சாட்­டில் தேரர் ஒரு­வர் உட்பட இரண்­டு­பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­ய­கத்­தின் விசா­ர­ணைப் பிரி­வி­ன­ரால் கைது செய்­யப்­பட்­ட­தாக வெளி­நாட்டு வேலை வாய்ப்­புப் பணி­ய­கம் அறி­வித்­துள்­ளது.
அந்­தப் பணி­ய­கத்­தின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­துக்கு முன்­னால் நட­மா­டிக் கொண்­டி­ருந்த சில பெண்­களை வானூர்தி நிலைய விசா­ர­ணைப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் அழைத்து விசா­ரித்­த­னர். தேரர் ஒரு­வர், பணிப்­பெண்­க­ளாகத் தங்­களை வெளி­நாட்­டுக்கு அழைத்­துச் செல்­ல­வுள்­ள­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

தேர­ரி­டம் விசா­ரணை செய்­த­போது, பெண்­கள் 10 பேரை­யும் டுபா­யில் இடம்­பெ­றும் மதப்­போ­த­னை­யில் பங்­கேற்று அங்­கி­ருந்து நேபா­ளத்­துக்கு ஆன்­மீ­கச் சுற்­று­லா­வுக்கு அழைத்­துச்­செல்­வ­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

முரண்­பட்ட கருத்­தில் சந்­தே­கம் கொண்டு அவர்­களை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.  இந்­தச் சட்­ட­வி­ரோதச் செயற்­பாட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர்­கள் பல்­ல­தெ­னிய ரத்­த­ன­சிறி தேரர் உட்பட பொரளை மற்­றும் மீதொட்­ட­முல்ல பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த இரு­வர் இருந்­துள்­ள­னர்.

இவர்­க­ளி­டம் தொடர்ந்து விசா­ரணை நடத்­தி­ய­போது, இதற்கு முன்­னர் 4 தட­வை­கள் பெண்­களை இவ்­வாறு பணிப்­பெண்­க­ளாக டுபாய்க்கு அனுப்­பி­யமை தெரி­ய­வந்­துள்­ளது.

5 வய­துக்கு குறை­வான பிள்­ளை­கள் உள்­ள­வர்­களை வெளி­நாட்­டுக்கு வேலைக்கு அனுப்ப முடி­யாது என்­ப­தால், மதப் போதனை என்ற பெய­ரில் சட்­ட­வி­ரோ­த­மாக அனுப்ப முற்­பட்­டமை விசா­ர­ணைக­ளில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர்­களை மினு­வாங்­கொட நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்த அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.

You might also like