நுண்­க­டன் திட்­டத்தை தடை செய்­யு­மாறு பரிந்­து­ரைப்பு

வவு­னியா மாவட்­டத்­தில் தொட­ரும் கடன் திட்­டம் என்­னும் பெய­ரி­லான மக்­கள் வாழ்வுக்கு குந்­த­க­மாக அமை­யும் நுண்­க­டனை தடை செய்­யு­மாறு வவுனியா வடக்கு பிர­தேச செய­லா­ளர் மாவட்­டச் செய­லா­ள­ருக்கு பரிந்­து­ரைத்­துள்­ளார்.

வவு­னியா மாவட்­டத்­தில் நகர்ப்­பு­றத்­தில் வெறுக்­கப்­ப­டும் கடன் திட்­டங்­கள் கிரா­மப்­புற மக்­க­ளி­டம் பொய் வார்த்­தை­க­ளைக் கூறி ஏமாற்றி வழங்­கப்­ப­டு­கின்­றது. அதன் பின்­னர் குறித்த கடன் அற­வீடு என்­னும் பெய­ரில் அந்­தக் குடும்­பங்­கள் வாட்டி வதைக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு கடன் வழங்­கும் நிறு­வ­னங்­கள் மத்­திய வங்­கி­யின் விதி­ மு­றை­கள் அனைத்­தை­யும் புறந்­தள்ளி 30 வீத வட்­டியை அற­வி­டு­கின்­ற­னர்.

அத்­து­டன் குறித்த காலத்­ துக்குள் செலுத்­தத் தவ­றும் பட்­சத்­தில் உட­ன­டி­யா­கவே வட்­டியை முத­லு­டன் கணித்து வட்டி கோரு­கின்­ற­னர். அது மட்­டு­மன்றி கிரா­மங்­க­ளுக்­குள் இரவு வேளை­க­ளில் இந்த கடன் அற­வீட்­டா­ளர்­கள் செல்­வ­த­னால் மக்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

வவு­னியா நெடுங்­கே­ணிக் கிரா­மம் இந்த வகை­யில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.எனவே குறித்த கடன் முறை­யினை உட­ன­டி­யாக எமது மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளும் அனைத்து நிதி நிறு­வ­னங்­க­ளை­யும் தடை செய்ய மாவட்­டச் செய­லா­ளர் என்ற வகை­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என வவு­னியா வடக்கு பிர­தேச செய­லா­ளர் க.பரந்­தா­மன் எழுத்­தில் கோரி­யுள்­ளார். –

downloadnulled

You might also like