ஐ.தே.கவுக்குப் பொறிவைக்கும் மைத்திரிக்குக் ‘கடிவாளம்’ சு.க.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவுக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான சிறப்­புச் சந்­திப்­பொன்று விரை­வில் நடை­பெ­ற­வுள்­ளது.

மகிந்த ஆட்­சி­யின்­போது இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற் குத் தனித்­தனி ஆணைக் ­குழு அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­வ­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், இது தொடர்­பில் பேச்சு நடத்­து­வ­தற்கு நேரம் வழங்­கு­மாறு அரச தலை­வ­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர்.

இதற்­க­மை­யவே அடுத்த வார­ம­ள­வில் இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று அறி­ய­மு­டி­கின்­றது.ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைக் கடு­மை­யாக விமர்­சிக்  ­கின்­ற­னர் என்று, சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடம் அண்­மை­யில் முறை­யிட்­டி­ ருந்­தனர்.

இது தொடர்­பில் ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­ விளக்­கம் கோர­வுள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கின் றது.

பிணை­முறி விவ­கா­ரத்­தைக் கையி­லெ­டுத்து ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடும் நெருக்­கடி கொடுத்­து­வ­ரும் நிலை­யி­லேயே, கடந்த ஆட்­சி­யின்­போது இடம்­பெற்ற மோச­டி­கள் தொடர்­பில் ஆரா­ய­வேண்­டும் என ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கோர­வுள்­ள­னர்.

கூட்டு அர­சி­லுள்ள சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­கள் சில­ரைக் குறி­வைத்தே விசா­ரணை கோரப்­ப­ட­வுள்­ளது  என­வும் அறி­ய­மு­டி­கின்­றது.

You might also like