தென்­சீன விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வ­தற்கு தயார்- ட்ரம்ப்

‘‘சர்ச்­சைக்­கு­ரிய தென்­சீ­னக் கடற் பரப்பு விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வ­தற்­குத் தயார்’’ என்று தெரி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப்.

தென்­சீ­னக் கடற்ப­ரப்பை சீனா, தாய்வான், பிலிப்­பைன்ஸ், வியட்­நாம் உள்­ளிட்ட பல நாடு­கள் சொந்­தம் கொண்­டாடி வரு­கின்­றன.

சீனா சற்று கூடு­தல் அக்­கறை காட்­டி­யது. இத­னால் பன்­னாட்டு தீர்ப்­பா­யத்­தில் சீனா­வுக்கு எதி­ராக பிலிப்­பைன்ஸ் வழக்­குத் தொடர்ந்­தது. அதில் தென்­சீ­னக் கடற்ப­ரப்­பில் சீனா­வுக்கு உரி­மை­யில்லை என்று முடி­வா­கி­யது.

இதற்கு சீனா எதிர்ப்­புத் தெரி­வித்து குறித்த பகு­தி­யில் தொடர்ந்­தும் தனது இரா­ணுவ நட­வ­டிக்­கை­ களை நடத்தி வரு­கி­றது. சீனா­வின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமெ­ரிக்கா எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது.

தென் சீ­னக் கடற்பரப்பு பொதுப்­போக்­கு­வ­ரத்­துக்கு உடைய பாதை. அவற்­றில் சீனா தனது ஏக ஆதிக்­கத்தை நிலை­நாட்­டு­வதை ஏற்க முடி­யாது என்­பது அமெ­ரிக்­கா­வின் கருத்­தாக அமைந்­தது.

சீனா­வின் ஆக்­கி­ர­மிப்புக்குச் சவால் விடும் வகை­யில் அமெ­ரிக்­கா­ வின் போர்க் கப்­பல்­கள் அவ்­வப்­போது தென்­சீ­னக் கடற்பரப்புக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றன. அண்­மை­
யி­லும் அவ்­வாறு ஒரு அமெ­ரிக்­கப் போர்க் கப்­பல் அனுப்­பப்­பட்­டது.

இந்த நிலை­யில் தென்­சீ­னக் கடற்ப­ரப்பு விவ­கா­ரத்­தில் மத்­தியஸ்­தம் செய்­யத் தயார் என்று ட்ரம்ப் அறி­வித்­தார்.

ஆசிய பசிபிக் ஒத்­து­ழைப்பு மாநாடு வியட்­நா­மில் நேற்­று­ முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்த மாநாட்­டில் கலந்­து­கொண்ட பின்­னர் உரை­யாற்­று­கை­யி­லேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

You might also like