கிண்ணம் வென்றது  சுப்பர் கிங்ஸ்

மனோகரா பிறீமியர் லீக் எல்லே தொடரில் சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணம் வென்றது.

அல்வாய் மனோகரா விளையாட்டு கழகம் தனது 90ஆவது ஆண்டு நிறைவையொட்டி தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையே நடத்திய எல்லே தொடரின் இறுதியாட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ரைடஸ் அணி மோதியது.  முதலில் துடுப்பெடுத்தாடிய ரைடஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட

40 பந்துகளில் 12 இலக்குகளை இழந்து ஓர் ஓட்டத்தை மாத்திரம் பெற்றது. திவாகரன் இந்த ஓட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சுப்பர் கிங்ஸ் அணி 11 பந்துகளில் இரு இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது. மூன்றாமிடத்தை வாரியஸ் அணி பெற்றுக் கொண்டது.

 

You might also like