திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்துக்கு கணிசமான பதக்கங்கள்
இலங்கை கராத்தே சம்மேளனம் நடத்திய தேசியமட்ட கராத்தே தொட ரில், திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்துக்கு ஒரு தங்கப்பதக்கம் உட்பட நான்கு பதக்கங்கள் கிடைத்தன.
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இந்தப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. 17 வயது பெண்களுக்கான குமித்தே போட்டியில் சானுஜா தங்கப் பதக்கத்தையும், காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத் தையும், 16 வயதுப்பிரிவு பெண் களுக்கான குமித்தே போட்டியில் தனுசிகா வெண்கலப் பதக்கத்ைதயும், 17 வயது ஆண்களுக்கான குமித்தேப் போட்டியில் சங்கீதன் வெண்கலப் பதக்கத்ைதயும் கைப்பற்றினர்.