விமர்சிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு- டோனி

டோனி ஓய்வு பெற­வேண்­டும், பெறக்­கூ­டாது என்­பது தொடர்­பில் கிரிக்­கெட் வட்­டா­ரத்­தில் ‘பெரும் புயல்’ வீசி­வ­ரும் நிலை­யில், தன்னை விமர்­சிக்­கும் உரிமை அனை­வ­ருக்­கும் உள்­ளது என்று ‘கூல்’ பதில் வழங்­கி­யுள்­ளார் டோனி.

நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான இரண்­டா­வது ரி-–20 ஆட்­டத்­தில் டோனி அதி­கம் நிதா­னித்­தார். டோனி­யின் அள­வுக்கு அதி­க­மான நிதா­ன­மும் இந்­திய அணி குறித்த ஆட்­டத்­தில் தோல்­வி­ய­டைய ஒரு கார­ண­மாக அமைந்­தது.

இதை­ய­டுத்து, ‘‘டோனி ரி-–20 ஆட்­டங்­க­ளில் இருந்து ஓய்வு பெற­வேண்­டும்’’ என்று வலி­யு­றுத்­தி­னார் முன்­னாள் வீரர் லக் ஷ்மன். அகார்­கர், கங்­குலி ஆகி­யோர் லக் ஷ்மனின் கருத்தை ஆமோ­தித்­த­னர். ஆனால் இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி, மற்­றும் இந்­திய அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் ரவி­சாஸ்­திரி இரு­வ­ரும் லக் ஷ்மனுக்­குத் தமது கண்­ட­னத்­தைத் தெரி­வித்­த­னர். டோனி அணிக்­குத் தேவை என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

கவாஸ்­கர், சேவாக், கம்­பீர் உள்­ளிட்ட வீரர்­கள் டோனிக்கு தமது முழு ஆத­ர­வைத் தெரி­வித்தனர். எனி­னும் இந்த விவ­கா­ரத்­தில் டோனி தொடர்ந்து மௌன­மா­கவே இருந்­து­வந்­தார். தற்­போது அவர் தனது மௌனத்­தைக் கலைத்­துள்­ளார்.

‘‘எல்­லோ­ரும் கருத்­துக்­கள் கூற­லாம். அதை நாம் மதிக்க வேண்­டும். விளை­யாட்டு என்­பது வாழ்க்கை பற்றி அறி­வ­தற்கு ஒரு வழி என்று எப்­போ­துமே நான் நினைப்­ப­துண்டு. ஏமாற்­றத்தை எப்­படி எதிர்­கொள்­வது. வெற்றி தோல்­வி­யின்­போது மக்­கள் முன் எப்­படித் தோன்­று­வது என்­பது முக்­கி­யம். அதே­வே­ளை­யில் விமர்­ச­னம் மீதும் அதே நிலை­யில்­தான் இருக்க வேண்­டும். கற்­றுக்­கொள்­வது, தங்­க­ளது ஆட்­டத்­தி­றனை வளர்த்­துக் கொள்­வது எப்­படி என்­ப­தில் திறந்த மன­நி­லை­யோடு இருக்க வேண்­டும். இந்­திய அணிக்­காக நான் விளை­யா­டு­வது எனக்கு மிகச்­சி­றந்த உத்­வே­க­மாக இருக்­கும். நாம் ஒரு குறிப்­பிட்ட காலம் மட்­டுமே விளை­யா­டு­கி­றோம். அது ஒரு வரு­டத்­தில் இருந்து 15 வரு­டம் அல்­லது 20 வரு­டம் கூட இருக்­க­லாம். இந்­தக் காலப்­ப­கு­தி­யில் ஏகப்­பட்ட விமர்­ச­னங்­கள் வரும். அவற்றை திட­மாக எதிர்­கொள்ள வேண்­டும். சரி­யான விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொள்­ள வேண்­டும்’’ என டோனி மேலும் தெரி­வித்­தார்.

You might also like