ஆஷஸ் பயங்கரமொன்று இங்கிலாந்துக்கு உள்ளது- இயன் சப்­பல்

‘‘நடப்பு வருட ஆஷஸ் தொட­ரில். இங்­கி­லாந்­து அணிக்குப் பயங்­க­ர­மொன்று காத்­துள்­ளது’’ என்று தெரி­வித்­தார் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் முன்­னாள் தலை­வர் இயன் சப்­பல்.

‘‘பென் ஸ்டோக்ஸ் விவ­கா­ரம், வீரர்­க­ளின் காயங்­கள் ஆகி­ய­வற்றை வைத்­துப் பார்க்­கும் போது இந்த ஆஷஸ் தொடர் இங்­கி­லாந்­துக்கு சீர­ழிவை ஏற்­ப­டுத்­தும்­போல் தெரி­கி­றது. ஜோ ரூட் மிக மிக வலு­வான தலை­வ­ராக இருந்­தால் மட்­டுமே இத்­த­கைய சூழ்­நி­லை­க­ளைச் சமா­ளிக்க முடி­யும். 2002-–2003 தொட­ரில் இந்­தத் தொடர் போலவே அதீத நம்­பிக்­கை­யு­டன் இங்­கி­லாந்து வந்­தது. ஆனால் டேரன், அண்ட்ரு பிளிண்­டொப், சைமன் ஜோன்ஸ் காய­ம­டைய இங்­கி­லாந்து பரி­தா­பத்­துக்கு உரிய அணி­யாக மாறி­யது. அதே­போன்ற நிலை­யி­லேயே இங்­கி­லாந்து தற்­போது உள்­ளது. ஸ்ரோக்ஸ் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பின் காய­ம­டைந்து வில­கி­யுள்­ளார். மொயின் அலி காய­ம­டைந்­துள்­ளார். மொத்­தத்­தில் இங்­கி­லாந்­துக்கு ஆஷஸ் பயங்­க­ர­மொன்று நடப்பு வரு­டத்­தில் காத்­துள்­ளது’’ என இயன் சப்­பல் மேலும் தெரி­வித்­தார்.

You might also like