டோனியும் சச்சினைப் போன்றவர் -கபில்தேவ்

‘‘டோனி­யும் சச்­சி­னைப் போன்­ற­வர். ஓய்வு விட­யத்­தில் சச்­சி­னுக்கு என்ன நியா­யம் செய்­யப்­பட்­டதோ அதுவே டோனிக்­கும் வேண்­டும்’’ என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் முன்­னாள் தலை­வர் கபில் தேவ்.

டோனி­யின் ஓய்வு தொடர்­பான கருத்­துக்­கள் பர­வ­லாக அடி­பட்­டு­ வ­ரும் நிலை­யில் கபில்­தேவ் டோனிக்கு ஆத­ர­வாக தனது கருத்­தைப் பதி­வு ­செய்­துள்­ளார்.

‘‘ஒரு சில ஆட்­டத்தை வைத்து டோனியை ஏன்? விமர்­ச­னம் செய்­கி­றார்­கள் என்­பதை என்­னால் புரிந்துகொள்ள முடி­ய­வில்லை. வயது ஒரு பெரிய விஷ­யம் இல்லை என்­பதைப் புரிந்துகொள்ள வேண்­டும். திற­மை­தான் முக்­கி­யம். 2011 ஆம் ஆண்டு உல­கக்­கிண்­ணம் வென்ற இந்­திய அணி­யில் சச்­சின் இடம்­பெற்­றி­ருந்­த­போது அவ­ரது வயது 38. அப்­போது சச்­சினை எவ­ரும் ஒன்­றும் சொல்­ல­வில்லை. ஆனால் இப்­போது டோனி­யின் ஓய்வு குறித்து மட்­டுமே பேசப்­ப­டு­ கி­றது. டோனியை அணி­யில் இருந்து நீக்­கச் சொல்­கி­றார்­கள். அப்­ப­டிச் செய் தால் அவ­ருக்குச் சரி­யான மாற்று வீர­ராக எவ­ரைச் சேர்ப்­பீர்­கள். டோனி­யின் திறமை இந்­திய அணிக்கு முக்­கி­யம்’’ என கபில்­தேவ் மேலும் தெரி­வித்­தார்.

You might also like