உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றது செனகல்

ரஷ்­யா­வில் அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள உல­கக்­கிண்­ணத் தொட­ருக்கு சென­கல் அணி தகுதி பெற்­றது.

ரஷ்­யா­வில் அடுத்த வரு­டம் உல­கக்­கிண்ண கால்­பந்­தாட்­டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தொட­ருக்­கான தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் உல­கின் பல பாகங்­க­ளி­லும் நடை­பெற்றுவரு­கின்­றன.

தென்­னா­பி­ரிக்­கா­வில் அண்மையில் நடை­பெற்ற தகு­திச்­சுற்று ஆட்­ட­மொன்­றில் தென்­னா­ பி­ரிக்­கா­வும், சென­கல்­லும் மோதின. 2:0 என்ற கோல் கணக்­கில் சென­கல் வெற்­றி­பெற்­றது.

சென­கல் அணி­யின் சாகோ 12ஆவது நிமி­டத்­தில் ஒரு கோலைப் பதி­வு­செய்­தார். 38ஆவது நிமிடத் திலும் சென­கல்­லின் சார்­பாக பிறி­தொரு கோல் பதி­வா­னது. முதல் பாதி­யின் முடி­வில் 2:0 என்று முன்­னிலை வகித்­தது சென­கல். இரண்­டாம் பாதி­யில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை.

முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள உல­கக்­கிண்­ணத் தொட­ருக்­குத் தகுதி பெற்­றது சென­கல். 2002ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் உல­கக்­கிண்­ணத் தொட­ருக்கு சென­கல் தகு­தி பெ­று­வது இது முதல் தடவை.

You might also like