ஒரு வயதாகாத மகனுக்கு நடிகர் சையஃப் அலி கான் கொடுத்த கோடிப்பரிசு

இந்தி நடிகர் சையஃப் அலி கான், ஒரு வயது கூட நிரம்பாத தனது மகனுக்கு ஒன்றரை கோடி ரூபா( இந்திய) மதிப்பிலான சொகுசு காரை குழந்தைகள் தினப் பரிசாக கொடுத்துள்ளார்.

பொலிவூட் நட்சத்திரங்களான கரினா கபூர், சையஃப் அலிகான் தம்பதியருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒரு வயதாகும் தைமூர் அலி கானுக்கு, ஒன்றரைக் கோடி, ரூபா (இந்திய) மதிப்பிலான, ஸ்வான்கி எஸ் ஆர் டி சொகுசு காரை, தந்தை சையஃப் அலி கான் பரிசாக அளித்துள்ளார்.

இந்த ஆடம்பரக் காரில் குழந்தை அமர்வதற்கு என்று சிறப்பு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மகனுக்குச் சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதால், அந்த நிறத்திலேயே கார் வாங்கியதாகவும் நடிகர் சையஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

You might also like