பூனைக்கு வெண்கலச்சிலை அமைக்கவுள்ளது பிரான்ஸ்

முதன் முறையாக விண்வெளிக்குச் சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ராக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்குப் பின்னர் பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை பெற்றது.

இந்தப் பூனைக்கு பிரான்ஸில் வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை லண்டனைச் சேர்ந்த மாத்யூ செர்ஜ் மேற்கொண்டு வருகிறார்.

You might also like