நிதிக்கட்டுப்பாட்டுடன் சிறந்த சேவையாற்றிய திணைக்களங்களுக்கு விருதுகள்

2015 ஆம் ஆண்டின் நிதிக்கட்டுப்பாடு பற்றிய சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்க சிறந்த சேவையை வழங்கிய திணைக்களங்களுக்கு அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவால் தங்க விருது வழங்கப்பட்டது.

அரச கணக்குகள் பற்றிய நாடாமன்றக் குழுவின் மதிப்பீட்டு செயற்திட்டத்தின் கூட்டத்தில் வைத்து நேற்று இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளிடம் விருதுகள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் தலைமை அமைசச்ர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like