36 வயது அனுஷ்காவுக்கு பிரபாஸின் பிறந்த நாள் பரிசு

பாகுபலி’ ஜோடிகள் பிரபாஸும், அனுஷ்காவும் தங்களின் பிறந்த நாளுக்கு ஒருவருக்கொருவர் பரிசளித்து தங்களின் காதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி நடிகை அனுஷ்கா தனது 36 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். நடிகர் பிரபாஸ், அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வரும் நிலையில், அனுஷ்காவின் 36 ஆவது பிறந்தநாளில் அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளதாககட கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரபாஸ் பிறந்தநாளைக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை, அனுஷ்கா பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like