மைத்திரியை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளைமறுதினம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்ட அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொருத்தமான திகதி அறிவிக்கப்படும் என்று அரச தலைவர் பதிலளித்தார்.

நாளை மறுதினம் அரச தலைவருடன் சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது என்று அரச தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது என்று கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

You might also like