தொடருந்துத் திணைக்களத்தின்  பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்

இலங்­கை­யில் தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தின் பயன்­பாட்­டில் 105 இயந்­தி­ரங்­கள் உள்­ளன என்று போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரி­வித்­தது.

நாடா­ளு­மன்­றில் நேற்று வியா­ழக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்­தின் போது கூட்டு எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாண­யக்­கா­ர­வின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் போதே போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு பதி­லாக ஆளும் கட்சி பிர­தம கொற­டா­வும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக சபைக்கு இந்­தத் தக­வலை ஆற்­றுப்­ப­டுத்­தி­னார்.

தற்­போ­தைக்கு இலங்கை தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான இயந்­தி­ரங்­க­ளில் பயன்­பாட்­டுக்கு எடுக்க கூடிய இயந்­தி­ரங்­க­ளின் எண்­ணிக்கை யாது? எம் 2 மற்­றும் எம் 4 ரக இயந்­தி­ரங்­கள் மிக­வும் முக்­கி­ய­ மா­ன­தா­கும்.

அந்த ரக இயந்­தி­ரங்­கள் 27ஐ பயன்­பாட்­டில் இருந்து நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா? ஊழி­யர்­க­ளின் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட எம் 9 ரக ஒன்­பது என்­ஜின்­க­ளுக்கு என்ன நடந்­தது? – என்று வாசு­தேவ கேள்வி எழுப்­பி­னார்.

இந்த கேள்­விக்கு போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­திய தக­வ­லில் தெரி­விக்க்­ப­பட்­ட­தா­வது-

தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தி­டம் பயன்­பாட்­டில் இயந்­தி­ரங்­கள் 105 உள்­ளன. அவற்­றில் எம் 2, எம் 4, எம்6, எம் 7 ரக இயந்­தி­ரங்­களே அதி­க­மாக உள்­ளன.

எம் 9 இயங்­தி­ரங்­கள் ஒன்­பது உள்­ளன. அவற்­றில் கேளா­று­கள் ஏற்­பட்­டால் இந்­திய நிறு­வ­னம் ஒன்­றால் பழு­து­பார்க்­கப்­பட்டு சேவைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­றார்.

You might also like