காலி, கிந்தொட்டவில் பதற்றம்! – ஊரடங்குச் சட்டம் நடைமுறை!!

காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிந்தொட்ட பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சநிலை ஏற்பட்டதை அடுத்து அதைக் கட்டுப்படுத்துவற்கு பொலிஸ் விசேட படையணிகள் களமிறக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

ஊரடங்குச் சட்டம் நாளை காலை 9 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குருத்துவத்தை, மஹஹபுகல, வெளிப்பிட்டிமோதர, உக்வத்தை, கிந்தொட்ட ஆகிய பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிலுள்ள பியன்டிகம கிராம அலுவலர் பிரிவிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காலி, கிந்தொட்ட, ஹப்புகொட பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றை காரணமாக வைத்து முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்று கூறப்படுகின்றது. அதையடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தவற விடாதீர்கள்:  தனித்­துச் செல்­லும் மகிந்த ஒரு­போ­தும் வெல்லமாட்டார்

சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சிங்கள சகோதரர் ஒருவர் மோதியதில் அந்தப் பெண் காயங்களுக்குள்ளாகியுள்ளார். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்துக் கடந்த சில தினங்களாக சிறு சிறு முரண்டபாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று மோதலாக மாறியுள்ளது என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இன்று நண்பகல் முதல் எஸ்.ரி.எப். பாதுகாப்பு அந்தப் பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும், அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிந்தொட்டப் பிரதேசத்துக்கு வெளியிடத்தில் இருந்து வந்த குழுவொன்று இன்று (17) கடைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை மூடிய நிலையில் காணப்பட்டனர் என்று கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.

தேவைப்படின் அசாதாரண முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியேனும் கலகத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

தவற விடாதீர்கள்:  பணிப்புறக்கணிப்பை புறக்கணித்து யாழ் நோக்கி வந்த தொடருந்து

சற்று நேரத்துக்கு முன்னர் கிந்தொட்ட பிரதேசத்தில் வெடிச் சத்தம் ஒன்று கேட்டது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

சற்றுநேரத்துக்கு முன்னர் விசேட பொலிஸ் படைப்பிரிவுக்கு மேலதிகமான படையணி ஒன்று அந்தப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

Police curfew has been imposed in several areas in the Galle District until 9.00am Saturday (18) due to a tense situation, Police headquarters said in a statement.

According to the statement, police curfew has been imposed in Welipitimodara, Maha Hapugala, Rukwatta, Ginthota (East and West) Piyandigama and Kurunduwatta Grama Sevaka Divisions.

You might also like