உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கே வழக்கு

உள்­ளூ­ராட்சி எல்லை நிர்­ண­யம் தொடர்­பில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கில், பிர­தி­வா­தி­யாக அமைச்­சர் பைசர் முஸ்­தபா பெய­ரி­டப்­பட்­டுள்­ளார். வழக்­கா­ளி­கள் சார்­பில் அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­ வின் இள­நிலை சட்­டத்­த­ர­ணி­கள் முன்­னி­லை­யா­கின்­ற­னர்.
இந்த வழக்கு தேர்­தலை பிற்­போ­டும் நோக்­கு­டன் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு ஜே.வி.பி. தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்கா தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றில் நேற்று நடை­பெற்ற விவா­வ­தத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்சி தேர்­தல் தொடர்­பான விட­யத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் வர்த்­த­மானி அறி­வித்­தலை விடுத்­துள்ள நிலை­யில், சிறு குழு­வொன்று தமது குறு­கிய அர­சி­யல் இலா­பங்­க­ளுக்­காக தேர்­தல்­க­ளைக் காலம் தாழ்த்­தும் முயற்­சி­க­ளில் இறங்­கி­யி­ருக்­கின்­றது.

ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­யி­டப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்­கையை அடிப்­ப­டை­யாக வைத்து நீதி­மன்­றத்­தில் இப்­போது வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் சிலர் தமது வஞ்­சக அர­சி­ய­லுக்­காக நீதி­மன்­றைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள ஆறு வழக்­கு­க­ளு­டன் தொடர்­பு­டைய மனு­தா­ரர்­கள் நாடா­ளு­மன்­றில்­தான் இருக்­கின்­றார்­கள். அவர்­க­ளது இந்த வஞ்­ச­க­மான நோக்­கம் என்ன என்­பதை சபை­யில் உரி­ய­வர் வெளிப்­ப­டுத்­த­வேண்­டும்.

தவற விடாதீர்கள்:  மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை?

ஓர் உதா­ர­ணத்­தினை சுட்­டிக்­காட்­டு­கின்­றேன். குறித்த வழக்­கில் பிர­தி­வா­தி­யாக அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வும் அவ­ரது அமைச்­சின் செய­ல­ருமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர்.

மனு­தா­ரர்­கள் சார்­பில் அதே பைசர் முஸ்­த­பா­வின் இள­நிலை சட்­டத்­த­ர­ணி­களே வழக்­கி­லும் முன்­னி­லை­யா­கின்­ற­னர். மனு­தா­ரர் மற்­றும் பிர­தி­வா­தி­கள் என்று இரு­த­ரப்­பி­லும் பைசர் முஸ்­த­பா­வின் இள­நிலை சட்­டத்­த­ர­ணி­களே முன்­னி­லை­யா­கின்­ற­னர்.

இது முஸ்­தபா எதிர் முஸ்­தபா வழக்­கா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த வழக்­கு­கள் மீளப் பெறப்­ப­ட­வேண்­டும்.

மக்­கள் ஆணைக்­குப் பயந்து இவ்­வாறு செயற்­பட்­டால் அரச தலை­வ­ருக்­கும் அவ­ரது அணி­யி­ன­ருக்­கும் வர­லாற்­றில் கிடைக்­கப் போகும் நிலை என்­ன­வென்­பது இன்­றி­லி­ருந்தே எழு­தப்­ப­டும்.

மக்­கள் ஆணைக்­குப் பயந்து இவ்­வாறு செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு வர­லாற்­றில் கிடைத்த என்ன இடம் கிடைத்­தி­ருக்­கி­றது? சூதாட்ட அடிப்­ப­டை­யி­லான அர­சி­யல் நிலைக்­காது. அரச தலை­வர் ஆச­னத்­தில் அமர்ந்த பின்­னர், கிடைத்த மக்­கள் ஆணையை மறப்­பது தான் இது­வரை கால­மும் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் இரண்டு வரு­டங்­க­ளி­லேயே தமக்கு கிடைத்த மக்­கள் ஆணையை மறந்­து­விட்­டரோ என்ற சந்­தே­கம் எமக்கு எழுக்­கின்­றது.
தேர்­தலை ஒத்­தி­வைக்­கும் வஞ்­க­மான முயற்­சி­கள் நிறுத்­தப்­ப­டா­விட்­டால் எம்­மால் இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத தரப்­பி­ன­ரு­டன் கூட்­டுச் சேர்ந்­தா­வது அதைத் தோற்­க­டிக்க வேண்டி நிலமை ஏற்­ப­டும்.

தவற விடாதீர்கள்:  பாட­சா­லை­க­ளில் பாலி­யல் துர்­ந­டத்­தை வலயக் கல்­விப் பணி­மனை எடுத்த நட­வ­டிக்கை என்ன?

நவம்­பர் மாதம் 22ஆம் திகதி இந்த வழக்கு மீளப் பெறப்­ப­ட­வில்­லை­யென்­றால் அர­சி­யல் போக்கு வேறு பக்­க­மாக திசை திரும்­பும் என்­பதை அரச தலை­வ­ரும் அவ­ரது சகாக்­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும் – என்­றார்.

You might also like