தடையின்றி தொடரும் கூட்டமைப்பின் பயணம்!

வடக்­கு– கிழக்­கில் அண்­மைய நாள்­க­ளாக இடம்­பெற்று வரும் சம்­ப­வங்­கள் மக்­க­ளைக் குழப்­பத்­தில் ஆழ்த்தி வரு­கின்­றன. முத­லில் ஈ.பி. ஆர். எல். எவ் கூட்­ட­மைப்­பி­ல் இருந்து வில­கிச் சென்­றது.

தனி வழி­யில் செல்­லப்­போ­வ­தா­க­வும் அந்தக் கட்சி அறி­வித்­தது. பின்­னர் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் அர­சி­யல் கலப்­பில்­லாத பொது அணி­யொன்று களம் இறங்­கு­மென்ற அறி­விப்பு வௌியா­னது.

தற்­போது பொது அமைப்­புக்­க­ளின் ஆத­ர­வு­டன் அர­சி­யல் கட்­சி­கள் சில ஒன்­றி­ணைந்து தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தா­க வெளிவரும்­ அ­றி­விப்­புக்­கள் மக்­க­ளைக் குழப்பி வரு­கின்­றன.

இதேவேளை மன்­னார் ஆயர் இல்­லத்­தில் இடம்­பெற்ற, கூட்­ட­மைப்­பின் உடைப்­பைத் தடுத்து நிறுத்தி இணைப்­பைத் தொடர வைக்­கும் முயற்சி தோல்­வி­யில் முடி­வ­டைந்­த­தா­கத் தெரிய வரு­கின்­றது.

ஏற்­க­னவே கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக இயங்­கு­வ­தற்­குத் தீர்­மா­னித்­த­வர்­கள் ஒர­ணி­யில் திரண்டு நிற்­கின்ற நிலை­யில், இணக்க முயற்­சி­கள் வெற்றி பெறு­மென எவ­ருமே எதிர்­பார்க்க முடி­யாது.

அதே வேளை கடந்த காலங்­க­ளில் மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்ட சிலர் பொது அமைப்­புக்­க­ளின் பெய­ரைக் கூறிக் கொண்டு அர­சி­ய­லுக்­குள் நுழைந்து பத­வி­க­ளைப் பெறு­வ­தற்கு முயல்­வது நகைப்­புக்­கு­ரி­யது.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற மக்­கள் போர் கார­ண­மாக ஏற்­க­னவே நொந்து போன நிலை­யில் உள்­ள­னர். அவர்­கள் தமது வாழ்க்கையை மீட்­டெ­ டுப்­ப­தற்­குப் படா­த­பா­டு­பட்டு வரு­கின்­றார்­கள்.

அர­சி­யல்­வா­தி­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளும் அந்த மக்­களை வெறுப்­ப­டை­யச் செய்­து­விட்­டன. தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைப் பெற்­றுத் தரு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள் தவறி விட்­டார்­கள் என்ற கோப­மும் இவர்­க­ளி­டத்­தில் எழுந்­துள்­ளது.

இந்த நிலை­யில் கூட்­ட­மைப்­பின் பிளவு, உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­லில் மாற்று அணி க­ள­மி­றக்­கம் போன்ற செய்­தி­கள் அவர்­க­ளைச் சலிப்­ப­டைய வைத்து விட்­டன.

உள்­ளூ­ராட்சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­லில் தமிழ் மக்­கள் பேரவை கள­மி­றங்­காது என அறி­விக்­கப்­பட்­ட­போ­தி­லும், அதில் அங்­கம் வகிக்­கின்ற கட்­சி­க­ளும் ஆத­ர­வா­ளர்­க­ளும் வேறு ரூபத்­தில் கள­மி­றங்­கு­வ­தற்கு முற்­பட்­டுள்­ளமை நேர்­மை­யா­ன­தொரு செய­லா­கக் காணப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களை ஏமாற்­று­கின்­ற­தொரு செய­லாகத்தான் இத­னைக் கருத முடி­யும்.

தமிழ் மக்களது மதிப்பை இழந்துவரும்
வடக்கு மாகாண முதல்வர்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மாகா­ண­ச­பைத் தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்­பில் முதன்மை இடத்தை வகிக்­கின்ற இலங்­கைத் தமி­ழ் அரசுக் கட்­சி­யின் சார்­பில் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டார். தேர்­த­லில் அதிக விருப்பு வாக்­கு­க­ளை­யும் பெற்­றுக் கொண்­டார்.

மக்­கள் இவர்­மீது மதிப்­பும்,மரி­யா­தை­யும் கொண்­டி­ருந்­த­தால் இவ­ருக்கு அதி­க­ள­வான வாக்­கு­களை அள்ளி வழங்­கி­னார்­கள். ஆனால் பின்­னர் மக்­க­ளின் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­றும் வகை­யில் இவர் நடந்து கொண்­ட­தில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போ­து­ இ­வ­ரது வேடம் கலைந்­தது.

கூட்­ட­மைப்­புக்­குச் சார்­பா­கத் தாம் பரப்­பு­ரை­யில் ஈடு­ப­டப் போவ­தில்­லை­யென்ற அறி­விப்பு இவ­ரி­ட­மி­ருந்து வௌியா­னது. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான சிலர் மிகக் கேவ­ல­மான முறை­யில் அந்த அமைப்­பைத் திட்­டித் தீர்த்­த­னர், வசை­பா­டி­னர், இல்­லாத கதை­க­ளை­யெல்­லாம் கூறி­னர்.

தம்­மைப் பத­வி­யில் அமர்த்­தி­ய­வர்­கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­ப­டு­வதை முத­ல­மைச்­சர் கண்டு கொள்­ளா­மல் இருந்­தமை பல­ருக்­கும் ஆச்­ச­ரி­யத்­தைக் கொடுத்­தது. அதன் பின்­னர் மாகா­ண­ச­பை­யில் குழப்­பங்­கள் ஏற்­பட்­ட­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் இவர் இணைந்து செயற்­பட்­டார்.

கூட்­ட­மைப்பு உடைந்­தா­லும் பர­வா­யில்லை, தமது பத­வியே தமக்­குப் பெரிது என்ற நோக்­கமே இவ­ரி­டம் மேலோங்­கிக் காணப்­பட்­டது.

தம்­மை­யொரு தீவிர தமிழ் இன­வா­தி­யா­கக் காட்­டிக்­கொண்டு அதற்­கேற்­றாற்­போன்று அவ்­வப்­போது குழறுபடியான கருத்து வெளிப்பாடுகளை மேற்கொள்வது இவ­ரது வழக்கமாகும். இத­னால் தமிழ் மக்­கள் மத்­தி­யில் தமது மதிப்பு அதி­க­ரிக்­கும் என்­பது இவ­ரது கணிப்­பா­கும்.

எதிர்வ­ரும் உள்­ளூ­ரா­ட்சி மன்­றங்களுக்கான தேர்­த­லின்­போது இவர் என்ன செய்­யப் போகின்­றார் என்­பதை அறி­வ­தில் கூட்­ட­மைப்பு ஆத­ர­வா­ளர்­கள் ஆவ­லு­டன் உள்­ளார்­கள். உள்­ளூ­ராட்­சி­மன்­றங்களுக்கான தேர்­தலின்­போது பொது அணி என்ற பெய­ரில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அணி­யொன்று கள­மி­றக்­கப்­ப­டு­மா­னால் தமி­ழர் பகு­தி­க­ளில் பெரும் குழப்ப நிலை­யொன்று உரு­வாக வாய்ப்­புண்டு.

வடக்­குக் கிழக்­குத் தமி­ழர்­கள் தம் மத்­தி­யில் விரோ­தங்­களை வளர்த்­துச் செயற்­ப­டு­வ­தற்­கான சூழ்­நி­லை­யொன்­றும் உரு­வாகி விடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
சிதைப்பதற்கு முயற்சி

தற்­போ­தைய இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் கூட்­ட­மைப்பு பிள­வு­பட்டு நிற்­பது நல்­ல­தொரு சகு­ன­மா­கத் தெரி­ய­வில்லை. மக்­க­ளின் பிரச்­ச­னை­கள் தொடர்­பாக அர­சு­ட­னும், வௌிநாட்­டுப் பிர­தி­நி­தி­ க­ளு­டன் கூட்­ட­மைப்பு தொடர்ந்து பேச்சில் ஈடு­பட்டு வரும் இந்த வேளை­யில் அதில் பிளவு ஏற்­ப­டு­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஒரு காலத்­தில் பரம எதி­ரி­க­ளாக விளங்­கிய இலங்­கைத் தமி­ழ் அரசுக் கட்­சி­யும், தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் தமி­ழர்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு ஒன்­றி­ணைந்து தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணியை உரு­வாக்­கி­ய­தால் அர­சி­யல் ரீதி­யில் நன்­மை­க­ளைப் பெற­மு­டிந்­தது.

நான்­கு­ த­மிழ்க் கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்ற பெய­ரில் இயங்க ஆரம்­பித்­த­தன் பின்­னர் கூட்­ட­மைப்பு தமி­ழர்­க­ளின் அடை­யா­ள­மா­கத் திகழ்ந்­தது.இதைச் சிதைப்­ப­தற்­குச் சிலர் முயற்சி செய்­வதை ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை.

கடந்த காலங்­க­ளில் மக்­க­ளால் முற்­றா­கவே நிரா­க­ ரிக்­கப்­பட்ட சில வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­கள் மீண்­டும் அர­சி­ய­லில் தலை தூக்­கு­வ­தற்கு முயற்சி செய்­கின்­ற­னர். ஆனால் மக்­கள் இவர்­களை ஒரு­போ­துமே ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள். கூட்­ட­மைப்­பின் அர­சி­யல் பய­ணம் தொடர்ந்­தும் வீறு நடை­போ­டும் என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

You might also like