வடக்கின் 3 சாலைகளுக்கு சீர­மைப்பு நிதி கிடைத்­த­தும் கேள்விகள் கோரப்படும்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் சீர­மைக்­கப்­ப­ட­வுள்ள மூன்று பெரும் சாலை­க­ளுக்­கான நிதி கிடைக்­கும் கால அள­வுக்கேற்ப கேள்வி கோரல் விரை­வில் நடை­பெ­றும் என்று சாலை அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­தது.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் சாலை அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான சாலை­க­ளின் சீர­மைப்­பு­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதில் அடுத்த ஆண் டின் மிகப் பெரிய வேலைத்­திட்­ட­மாக யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் மூன்று பெரிய சாலை­களைச் சீர­மைப்­ப­தற்­கான நிதி­யை வழங்க தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அமைச்சு இணக்­கம் தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் – மானிப்­பாய் – ஊடான காரை­ந­கர் சாலை, யாழ்ப்­பா­ணம் – பொன்­னாலை – ஊடான பருத்­தித்­துறை சாலை, வழுக்­கை­யாறு – புங்­கு­டு­தீவு – ஊடான குறி­காட்­டு­வான் சாலை என்­பன சீர­மைக்­கப்­படவுள் ளன. இதற்­காக 15 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா வரை தேவைப்­ப­டும். இது மிகப் பெரிய தொகை­யா­கும். நிதி கிடைக்­கும் பட்­சத்­தில் வேலை­கள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­ப­டும்.

தவற விடாதீர்கள்:  யாழிலிருந்து விரை­வில் விடை­பெ­று­வேன்- இளஞ்­செ­ழி­யன்

சீர­மைக்­கப்­ப­ட­வுள்ள சாலை­கள் மூன்­றும் அதிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்த போக்­கு­வ­ரத்­துச் சாலை­கள் ஆகும். அன்­றா­டப் போக்­கு­வ­ரத்து மற்­றும் கால நிலை­யால் சாலை­கள் மாற்­றத்­துக்கு உள்­ளா­கும். ஆகவே ஒவ்­வொரு வரு­ட­மும் சாலை­க­ளின் தேய்­மா­னம் அதி­க­மா­கும்.

இந்­தச் சாலை­களைச் சீர­மைப்­ப­தற்கு அதிக நிதி தேவை. சாலை­ யின் சேதத்­துக்கு ஏற்ப அதன் சீர­மைப்புக் கும் அதிக நிதி தேவை என்­ப­தால் நிதி ஒதுக்­கீடு கால­தா­ம­த­மின்றி கிடைக்­கும் பட்­சத்­தில் வேலை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம், மானிப்­பாய், காரை­ந­கர் சாலை சீரமைப்­புக்­காக 3 ஆயி­ரத்து 437.5 மில்­லி­யன் ரூபாவும், யாழ்ப்­பா­ணம் பொன்­னாலை பருத்­தித்­துறை 5 ஆயி­ரம் 200 மில்­லி­யன் ரூபாவும், வழுக்­கை­யாறு புங்­கு­டு­ தீவு குறி­காட்­டு­ வான் சாலை­களை சீர­மைப்­ப­தற்கு 6 ஆயி­ரம் 830 மில்லியன் ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப் பி­டத்­தக்­கது.

You might also like