Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கொக்கிளாய் வயல்காணி விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள்­கு­டி­ய­மர்ந்த 164 குடும்­பங்­க­ளின் 800 ஏக்­கர் வயல்­நி­லங்­கள் தொடர்­பில் இறுதி முடி­வுக்கான மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல் கடந்த ஓகஸ்ட் மாதத்­தில் இருந்து வேண்­டு­மென்றே காலம் கடத்­தப்­ப­டு­வ­தாக நில உரி­மை­யா­ளர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டம் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்­பங்­க­ளின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணிப் பிணக்­கு­கள் தீர்க்­கப்­பட வேண்­டும். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் (தமது) காணி­கள் மீண்­டும் தமக்கே வழங்க வேண்­டும் என நில உரி­மை­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பில் மகா­வலி இரா­ஜாங்க அமைச்­சர் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்­க­ருக்­கும் தீர்­வாக அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்க சம்­ம­தம் வழங்­கி­ய­தோடு 835 ஏக்­கர் தொடர்­பில் தீர்­வை­யெட்­டும் வகை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் உள்­ளிட்ட சக­ல­த­ரப்­பும் அமைச்­சர் தலை­மை­யில் கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

குறித்த கலந்­து­ரை­யா­டல் நீண்ட கால­மாக தடைப்­பட்ட நிலை­யில் மீண்­டும் கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இதன்­போது மாவட்­டச் செய­லா­ளர் வெளி­நாடு சென்­றார் எனக் கார­ணம் காட்டி பிற்­போ­டப்பட் டது. அதன் பிற்­பா­டும் 3 தட­வை­கள் கூட்­டத்துக் கான திக­தி­யி­டப்­பட்­ட­ போ­தும் ஒரு தடவை ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் என­வும் ஏனைய தட­வை­கள் மாவட்ட நிர்­வாக வேலைப் பழு­கா­ர­ண­மா­க­வும் பிறி­தொரு தடவை மகா­வலி அதி­கார சபை­யின் அதி­கா­ரி­கள் இன்றி வெலி­ஓ­யா­வில் இயங்­கும் மகா­வலி அதி­கா­ர­சபை அலு­வ­லக இணைப்­ப­தி­காரி தலை­மை­யில் மட்­டும் கூட்­டம் இடம்­பெற்­றது.

அதா­வது தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான எரிஞ்­ச­காடு, குஞ்­சுக்­கால் வெளி, வெள்­ளைக் கல்­லடி போன்ற மானா ­வாரி வயல்­வெ­ளி­ளும், அடை­ய­க­றுத்­தான், தொண்­ட­ கண்­ட­கு­ளம், பூம­டு­கண்­டல், உந்­த­ரா­யன்­கு­ளம், ஆமை­யான்­கு­ளம், கூமா­வ­டி­ கண்­டல் வெளி போன்ற நீர்ப்­பா­சன வயல் வெளி­க­ளும் 1952 மற்­றும் 1980ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் முல்லைத் தீவு மாவட்­டச் செய­ல­கத்­தால் குறித்த மக்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­தி­ரம் வழங்­கப்­பட்ட வயல் காணி­க­ளா­கும்.

அத ன் பின்பு 1984ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­யால் அனைத்து மக்­க­ளும் இடம்­பெ­யர்ந்­த­னர்.
இந்­த­வே­ளை­யில் 1988ஆம் ஆண்­டின் ஏப்­பி­ரல் மாத 15ஆம் திகதி மற்­றும் 2007ஆம் ஆண்­டின் மார்ச் மாத 09 ஆம் திக­திய வர்த்­த­மா­னிப் பிர­சு­ரத்­தில் குறித்த பிர­தே­சம் ‘மகா­வலி ‘’ஸி’’ வல­யம் என பிர­சு­ரிக்­க ப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இடப்­பெ­யர்­வின் பின் மீண்­டும் 2011ஆம் ஆண்டு தமது பிர­த­சங்­க­ளில் மக்­கள் மீள் குடி­ய­மர்ந்­துள்­ள­னர். எனி­னும் இவ்­வா­றான தொடர்ச்­சி­யான இடப்­பெ­யர்­வின் கார­ண­மாக குறித்த மக்­க­ளி­டம் இருந்த அனைத்து ஆவ­ணங்­க­ ளும் தொலைக்­கப்­பட்­டன.

ஆனால் தற்­பொ­ழுது மேற்­படி குடும்­பங்­க­ளுக்கு 2013–01 சுற்று நிரு­பத்­துக்­க­ மைய தொலைந்த உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­ளுக்­குப் பதி­லாக புதிய உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­டா­துள்­ளன.

ஆயன்­கு­ளம், முந்­தி­ரிகைக் குளம், மறிச்­சுக்­கட்­டுக்­கு­ளம் போன்ற குளங்­க­ளின் கீழுள்ள மேற்­படி நீர்ப்­பா­சன வயல்­கா­ணி­கள் இந்­தப்­பி­ர­தே­சங்­க­ளில் குடி­ய­மர்த்தப் பட்ட சிங்­கள மக்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னர் வழங்­கப்­பட்ட இந்­தக் காணி­க­ளுக்­குச் சொந்­த­மான தமிழ்­மக்­கள் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான காணி­களை இழந்த நிலை­யில் மிக­வும் வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழ்­கின்­றார்­கள்.

எனவே மேற்­படி சுற்­று­ நி­ரு­பத்­துக்­க­மைய வயல்­கா­ணி­க­ளின் உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

தற்­போது சிங்­கள மக்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள வயல்­கா­ணி­கள் மீள­வும் முன்­னர் வழங்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட முடி­யாது என­வும் அதற்­குப் பதி­லாக அதி­கார சபை­யின் கீழ் உள்ள மாற்­றுக்­கா­ணி­களே வழங்க முடி­யும் என வெலி­ஓ­யா­வில் உள்ள மகா­வலி அதி­கார சபை­யின் இணைப்பு அலு­வ­லக அதி­காரி அண்­மை­யில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் இறுதி முடி­வினை எட்­டு­வ­தற்­காக மகா­வலி அதி­கார சபை, மாவட்­டச் செய­லா­ளர், பிர­தேச செய­லா­ளர், நில உரி­மை­யா­ளர்­கள் பங்­க­ளிப்­பில் ஒன்­று­கூடி இறுதி முடி­வினை எட்­டு­மாறு அமைச்­சர் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலை­யி­லும் குறித்த கலந்­து­ரை­யா­டல இடம்­பெ­ற­வில்லை என்­பதே அப்­ப­குதி மக்­க­ளின் குற்­றச்­சாட்­டா­க­வுள்­ளது.

இது தொடர்­பில் முல்லை மாவட்­டச் செய­ல­ருக்­குத் அழைப்பு எடுத்­த­போ­தும் தொடர்பு கிடைக்­க­ வில்லை.-