கோத்தாவுக்கு எதிரான வழக்கு சாட்சியப் பதிவுக்குத் திகதி குறிப்பு

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்ச, அவன்ட் காட் நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வர் உட்­பட எண்­ம­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கின் சாட்­சி­யப் பதி­வுகள் பெப்­ர­வரி 26 மற்­றும் மார்ச் 26ஆம் திக­திகளில் நடை­பெ­று­மெ­ன கொழும்பு பிர­தான நீதி­வான் நீதி­மன்­றத்­தால் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அவன்ட் காட் மெரி­டைம்ஸ் நிறு­வ­னத்­தி­னூ­டாக மிதக்­கும் ஆயு­தக் களஞ்­சி­ய­சா­லையை அமைத்து, அர­சுக்கு 11.4 பில்­லி­யன் ரூபா நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னர்.
இந்த குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில், இலஞ்ச, ஊழல் பற்­றிய சாத்­து­தல்­க­ளைப் புல­னாய்வு செய்­வ­தற்­கான ஆணைக்­கு­ழு­வால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு, நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ரணை, கொழும்பு பிர­தான நீதி­வான் லால் ரண­சிங்க பண்­டார முன்­னி­லை­யில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, சந்­தே­க­ந­பர்­க­ளால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அடிப்­படை எதிர்ப்­பு­க­ளும் நிரா­க­ரிக்­கப் பட்­டன.

அதன்­பின்­னர், சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு குற்­றப் பத்­தி­ரம் வாசித்­துக்­காட்­டப்­பட்­ட­து­டன், குற்­ற­வா­ளி­ களா, நிர­ப­ரா­தி­களா என வின­வப்­பட்­ட­போது, சந்­தே­க­ந­பர்­க­ளின் சட்­டத்­த­ர­ணி­க­ளால் ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்­டது.

19 குற்­றச்­சாட்­டு­க­ளைக் கொண்ட குற்­றப் பத்­தி­ரம் வாசிக்­கப்­பட்­டது என­வும், தமது சேவை பெறு­நர்­க­ளுக்கு அதி­லுள்ள சட்­டப்­பி­ரி­வு­கள் தொடர்­பான விளக்­கங்­கள் இல்­லை­யென்­ப­தால் உட­ன­டி­யாக தெரி­விக்­க­மு­டி­யாது என­வும் அறி­வித்­த­னர்.

சாட்­சி­யா­ளர்­க­ளின் பட்­டி­ய­லும் ஆவ­ணங்­க­ளும் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும், அதைக் கொண்டே தாம் பதி­ல­ளிக்­க­மு­டி­யும் என்­றும் குறிப்­பிட்­ட­னர்.
இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்த சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி ஜனக பண்­டார, சாட்­சி­யப் பதி­வுக்­குத் திகதி குறிக்­கப்­பட்­டா­லேயே, கோரப்­ப­டும் ஆவ­ணங்­களை வழங்­க­மு­டி­யும் என்று மன்­றுக்கு அறி­வித்­தார்.

60 சாட்­சி­யா­ளர்­கள் உள்­ள­னர் என்­றும், 208 ஆவ­ணங்­கள் உள்­ளன என­வும் தெரி­வித்த ஜானக, அவற்றை மறைப்­ப­தற்­கான எவ்­வித அவ­சி­ய­மும் முறைப்­பாட்­டா ­ளர் தரப்­புக்கு இல்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

அத­னை­ய­டுத்து, சாட்­சி­யப் பதி­வுக்­கான தினங்­காக பெப்­ர­வரி 26 மற்­றும் மார்ச் 26ஆம் திக­தி­கள் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஆவ­ணங்­க­ளை­யும் சாட்­சி­யா­ளர்­கள் பட்­டி­ய­லை­யும் டிசெம்­பர் 8ஆம் திக­திக்கு முன்­னர், சந்­தே­க­ந­பர்­கள் தரப்­புக்கு வழங்­கு­வ­தாக அரச சட்­டத்­த­ரணி அறி­வித்­தார்.

You might also like