மக்­க­ளின் உணர்­வு­க­ளைப் பிர­தி­ப­லிக்­கின்ற உன்­ன­த­மான அவையே நாடா­ளு­மன்றம்

‘‘மக்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும், உணர்­வு­க­ளை­யும் பிர­தி­ப­லிக்­கின்ற உன்­ன­த­மான, மேன்­மை­யான ஒரு அவையே நாடா­ளு­மன்றம். மக்­க­ளின் குர­லாக ஒலிக்­கும் நாடா­ளு­மன்­றம் பற்றி மாண­வர்­கள் அறிந்­தி­ருக்க வேண்­டும். இதற்கு எதிர்­கா­லத்­தில் படித்­த­வர்­கள் செல்ல வேண்­டும்’’ என மன்­னார் மறை­மா­வட்ட கலை­ய­ருவி அமைப்­பின் இயக்­கு­நர் அருட்­தந்தை தமிழ் நேசன் அடி­க­ளார் தெரி­வித்­தார்.

மடு கல்வி வல­யப் பிரி­வுக்­குட்­பட்ட பாட­சாலை மாண­வர்­க­ளின் மாண­வர் நாடா­ளு­மன்ற முதல் அமர்வு நேற்று முன்­தி­னம் ஆண்­டாங்­கு­ளத்­தில் அமைந்­துள்ள மடு வல­யக்­கல்வி அலு­வ­லக கேட்­போர் கூடத்­தில் இடம் பெற்­றது.

இதன்போது கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தொடர்ந்­தும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ் மக்­கள் சார்­பில் ­நாடாளு­மன்­றத்துக்கு நாம் அனுப்­பும் பிர­தி­நி­தி­கள் புத்­தி­ஜீ­வி­ க­ளாக, கல்­வி­மான்­க­ளாக, சுய­ந­லம் அற்­ற­வர்­க­ளாக, மக்­கள் தொண்­டர்­க­ளாக இருக்க வேண்­டும். ஒரு­சில அர­சி­யல்­வா­தி­க­ளின் தவ­றான, கீழ்த்­த­ர­மான செயற்­பா­டு­க­ளால் அர­சி­யல் பற்­றிய தவ­றான கண்­ணோட்­டம் இன்று மக்­க­ளி­டம் காணப்­ப­டு­கின்­றது.

அத­னால் அர­சி­யல் ஒரு சாக்­கடை என்ற மனப்­ப­திவு ஏற்­பட்­டுள்­ளது. அர­சி­யல் என்­பது சாக்­கடை அல்ல. அது புனி­த­மா­னது.  தமிழ் மக்­க­ளா­கிய நாம் நமது உரி­மை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நீண்ட நெடிய அகிம்­சைப்­போர், ஆயு­தப்­போர் போன்­ற­வற்றை கடந்து வந்­துள்­ளோம்.

இப்­போது நாடா­ளு­மன்ற அர­சி­யல் ஊடாக ஜன­நா­யக வழி­யில் நமது உரி­மை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டிய சூழ்­நி­லை­யில் இருக்­கின்­றோம். நாம் விரும்­பி­னா­லும் விரும்­பா­ விட்­டா­லும் இது­தான் யதார்த்­தம்.

இதை­விட வேறு வழி நமக்கு இல்லை அதன் ஊடாக தமிழ் மக்­க­ளா­கிய நாம் நமது ஜன­நா­யக உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்­டும். ஆரோக்­கி­ய­மான கருத்­துப் பரி­மாற்­றம், மாற்­றுக்­கொள்­கை­களை, மாற்­றுக்­க­ருத்­துக்­களை மதிக்­கின்ற மனப்­பக்­கு­வம் என்­பன மாண­வர் பரா­யத்­தில் இருந்தே வளர்க்­கப்­பட வேண்­டும். அதற்­கு­ரிய பயிற்­சிப் பாச­றை­யாக மாண­வர் நாடா­ளு­மன்ற அமர்­வு­கள் அமைய வேண்­டும்- – என்­றார்.

You might also like