மகிந்தவின் பிரதானி மீதான மனு நவ.24 இல் விசாரணை

நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் பொதுச் சொத்­து­கள் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ், தாம் கைது செய்­யப்­ப­டு­வ­தைத் தடுக்­கு­மாறு கோரி, முன்­னாள் அரச தலை­வர் பாது­காப்­புப் பிர­தானி காமினி சென­ரத் உள்­பட மூவ­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரி­மை­கள் மனுக்­களை நவம்­பர் 24ஆம் திக­திக்கு எடுத்­துக் கொள்ள உயர்­நீ­தி­மன்­றம், நேற்று தீர்­மா­னித்­தது.

2012ஆம் ஆண்டு அமைச்­ச­ர­வை­யால் ஒதுக்­கப்­பட்ட 18.5 பில்­லி­யன் ரூபாய் நிதி­யில் 4 பில்­லி­யன் ரூபாயைச் சட்­ட­வி­ரோ­த­மாக முத­லீடு செய்­ய­த­னர் என்று, இவர்­கள் மூவ­ருக்­கும் எதி­ராக நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட பி அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் தாம் கைது செய்­யப்­ப­டு­வ­தைத் தடுக்­கு­மாறு கோரி, காமினி சென­ரத், சிறி­லங்கா காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் முன்­னாள் முகா­மைத்­து­வப் பணிப்­பா­ளர் பிய­தாஸ குடா­ப­லகே, சமுர்த்தி நிறு­வ­னத்­தின் ஆணை­யா­ளர் நெய்ல் பண்­டார ஹபு­வின்ன ஆகி­யோரே இந்த மூன்று மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர, நிதிக் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வின் பணிப்­பா­ளர், சட்­டமா அதி­பர் உட்­பட சிலர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர்.

தவற விடாதீர்கள்:  மகிந்தவைக் கண்டு ஐ.தே.க. அஞ்சாது- ரணில்

இந்த மனுக்­கள், தலைமை நீதி­ய­ர­சர் பிரி­ய­சாத் டெப், நீதி­ய­ர­சர் அனில் குண­ரத்ன ஆகி­யோ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்­கள் குழாம் முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

மனு­தா­ரர்­கள், கோட்டை நீத­வான் நீதி­மன்­றத்­தால் எதிர்­வ­ரும் 21ஆம் வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று காமினி சென­ரத் சார்­பில் முன்­னி­லை­யான அரச தலை­வர் சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, நீதி­ய­ர­சர்­க­ளின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வந்­தார்.

பிணை மனு தொடர்­பான உத்­த­ர­வும் அன்­றைய தினத்­தி­லேயே வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் மனுவை அதற்­குப் பின்­னர் எடுத்­துக்­கொள்­ளு­மா­றும் கோரி­னார்.

சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் சார்­பில் பிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் துசித் முத­லிகே முன்­னி­லை­யா­கி­ யி­ருந்­த­து­டன், காமினி சென­ரத் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, சட்­டத்­த­ர­ணி­க­ளான சுகத் கல்தேரா, நிரான் அங்கிரல் ஆகியோர் முன்னிலை யாகியிருந்தனர்.

You might also like