இந்­தி­ரா­பு­ரத்தில் வெடி­பொ­ருள் அகற்­றும் பணி­களை அதி­கா­ரி­கள் பார்வையிட்டனர்

பளைப் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தில் வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் பணி­க­ளுக்கு நிதி வழங்­கும் நாடு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் கடந்த 15 ஆம் திகதி கிரா­மத்துக்கு நேரில் சென்று பணி­க­ளைப் பார்­வை­யிட்டு மீளக்­கு­டி­ய­ மர்ந்­துள்ள குடும்­பங்­கள் எதிர்­நோக்­கும் பிரச்சி­னை­ கள் தொடர்­பா­க­வும் கேட்­ட­றிந்­த­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

மீளக்­கு­டி­ய­மர்ந்­துள்ள மக்­க­ளின் கோரிக்­கைக்கு ஏற்ப மிக விரை­வில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தில் வெடி­பொ­ருள்­கள் முழு­மை­யாக அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும் குறித்த அதி­கா­ரி­க­ளால் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.அது தொடர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

போர் நடை­பெற்ற பகு­தி­க­ளில் காணப்­ப­டும் வெடி­பொ­ருள்­களை அகற்­று­வ­தற்கு நிதிப் பங்­க­ளிப்பை வழங்­கும் அமெ­ரிக்கா மற்­றும் ஐக்­கிய ராஜ்­ஜி­யம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த மூன்று அதி­கா­ரி­கள் கடந்த புதன்­கி­ழமை அங்கு சென்று வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் பணி­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

2000ஆம் ஆண்டு பளைப் பிர­தேச மக்­கள் ஒட்டு மொத்­த­மாக இடம்­பெ­யர்ந்து இந்­தி­ரா­பு­ரம் தவிர்ந்த ஏனைய பிரிவு மக்­கள் மீளக்­கு­டி­ய­ மர்ந்­த­னர். முக­மா­லைப் பகுதி போர் முனை­யா­கக் காணப்­பட்­ட­தால் 2011ஆம் ஆண்டு தொடக்­கம் வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் பணி­களை ஹலோ டிரஸ்ற் நிறு­வ­னம் மேற்­கொண்டு வரு­கி­றது.

தவற விடாதீர்கள்:  பாட­சாலை மாணவி வீட்­டில் உயி­ரி­ழப்பு!!

அந்­தக் காலப் பகு­தி­யில் தொட­ருந்­துப் பாதை (தண்­ட­வா­ளம்) மற்­றும் முதன்­மைச் சாலை சீர­மைப்­புப் பணி­க­ளுக்­காக வேம்­பொ­டு­கே­ணிச் சந்­தி­யி­லி­ருந்து இந்­தி­ரா­பு­ரம் ஊடாக முக­மாலை வரை­யி­லான சுமார் 2 கிலோ மீற்­றர் தூரம் வரை­யான பகு­தி­கள் 2011, 2012ஆம் ஆண்­டு­க­ளில் வெடி­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்டு அர­சி­டம் கைய­ளிக்­கப்­பட்­டன.

தொடர்ந்து 2014ஆம் ஆண்டு சாலை­யின் வடக்­குப் புற­மாக வெடி­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்ட சுமார் 200 மீற்­றர் தூர பிரதேசத்தில் மக்­கள் மீள் குடி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

சாலை­யின் தெற்­குப் புற­மாக தண்­ட­வா­ளத்துக்கு அப்­பால் வெடி­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்ட 200 மீற்­றர் தூரத்­தில் சுமார் 150 மீற்­றர் தூரம் வரை கடந்த டிசம்­பர் இரண்­டாம் திகதி மீள்­கு­டி­ ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் 150 ஏக்­கர் பரப்­ப­ளவு கொண்ட இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தில் சுமார் 25 ஏக்­கர் காணி மீள் குடி­ய­ மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்டு ஏனைய பகு­தி­க­ளில் வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்த நிறு­வ­னம் துரித கதி­யில் வெடி­பொ­ருள்­களை அகற்ற நிதி நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­வ­தால் அந்­தப் பணி­களை நேரில் பார்­வை­யிட்­ட­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.-

You might also like