கொழும்பில் கடத்தப்பட்ட 2 தமிழர் உயிருடன் இல்லை

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு

கொட்­டாஞ்­சே­னை­யில் 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்­டுக் காணா ­மற் போகச் செய்­யப்­பட்ட 2 தமி­ழர்­க­ளும் உயி­ரு­டன் இல்லை என்று தீர்மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குற் றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் தெரி­வித்­த­னர்.

வடி­வேல் பக்­கி­ரி­சாமி லோக­நா­தன், இரத்­ன­சாமி பர­மா­னந்­தன் ஆகி­யோரே கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

அவர்­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கத் தக­வல் இல்­லாத நிலை­யில், சாட்­சி­கள் கட்­ட­ளைச் சட்­டத்­தின் 108ஆவது அத்­தி­யா­யத்­தின் பிர­கா­ரமே குற்­றப் புல­னாய்­வுப் பிரி­ வி­னர் நீதி­மன்­றில் அவ்­வாறு கூறி­யுள்­ள­னர்.

இரு தமி­ழர்­க­ளுக்­கும் சொந்­த­மான அலை­பே­சி­கள், தங்க ஆப­ ர­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டும் கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண்­டர் தயா­னந்த, சிப்­பாய் சுசந்த மற்­றும் ரியர் அட்­மி­ரல் ஆனந்த குருகே ஆகி­யோர், குறித்த தமி­ழர்­க­ளின் வாக­னத்­தைத் துண்டு துண்­டாக வெட்­டிய சம்­ப­வம் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­கள் தொடர்­பி­லும் பொறுப் புக் கூற­வேண்­டும் என­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கொழும்பு மேல­திக நீதி­வான் ஜெய­ராம் ட்ரொஸ்கி முன்­னி­லை­யில் கூறி­யுள்­ள­னர்.

காணா­மற்­போன இரு­வ­ரின் அலை­பே­சி­கள், தங்க நகை­களை கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண் டர் தயா­னந்­தவே பயன்­ப­டுத்­திய நிலை­யில், அதற்­காக அவ­ரைக் கைதுசெய்­யத் தீர்­ம­னித்­த­போது இர­க­சிய அறிக்கை ஊடாக கைது செய்­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு குற்­றத் தடுப்­புப் பிரிவுக் குப் பொறுப்­பாக இருந்து தற்­போது தாஜு­தீன் கொலை விவ­கா­ரத்­தில் விளக்­க­ம­றி­ய­லில் இருக்­கும் முன்­னாள் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் அனுர சேன­நா­யக்­க­வி­டம் விசா­ரணை செய்ய மன்­றின் அனு­ம­தி­யைக் கோரு­கின்­றோம்.

இந்த சம்­ப­வத்­து­டன் கடற்­ப­டை­யின் ரியர் அட்­மி­ரல் ஆனந்த குருகே, லெப்­டி­னன்ட் கொமாண்­டர் தயா­னந்த மற்­றும் கடற்­ப­டைச் சிப்­பாய் சுசந்த ஆகி­யோர் நேர­டி­யா­கத் தொடர்­பு­பட்­டுள்­ள­னர் என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மன்­றில் கூறி­னர்.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் கோரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளித்த நீதி­வான், வழக்கை எதிர்­வ­ரும் ஜூன் 13ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார். அத்­து­டன் தற்­போது கைது செய் யப்­பட்­டுள்ள வெலி­ச­றை­யில் உள்ள கடற்­படை வைத்­தி­ய­சா­லை­யின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் தம்­மிக அனி­லின் பிணைக் கோரிக்­கையை நிரா­க­ரித்து விளக்­க­ம­றி ­யலை நீடித்­தார்.

You might also like