ஐ.தே.கட்சியின் உறுப்­பி­னர்­கள் பலர் அலோ­சி­ய­ஸு­டன் தொடர்பு

மத்­திய வங்கிப் பிணை­முறி மோசடி தொடர்­பான 8 ஆவது கோப் குழு அமர்­வின்­போது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பேர்­பெச்­சு­வல் ட்சரிஸ் நிறு­வ­னத் தலை­வர் அர்­ஜுன் அலோ­சி­ய­ஸு­டன் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­த­னர் என்று மத்­திய வங்கிப் பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைக்­கு­ழு­வில் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளம் சமர்ப்­பித்­துள்ள ஆவ­ணத்­தில் இந்­தத் தக­வல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர் தயா­சிறி, இரா­ஜாங்க அமைச்­சர் சுஜீவ சேன­சிங்க, பிர­தி­ய­மைச்­சர் அஜித் பி பெரேரா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹெக்­டர் அப்­பு­ஹாமி, ஹர்­சன ராஜ­க­ருணா ஆகி­யோரே தொடர்­பு­களை வைத்­தி­ருந்­த­னர் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

பேர்­பெச்­சு­வல் நிறு­வ­னத்தின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் கசுன் பலி­சேன மற்­றும் மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ரன் ஆகி­யோர் 7 தட­வை­கள் அலை­பே­சி­யில் உரை­யா­டி­ய­மை­யும், 7 தட­வை­கள் குறும்­செய்தி மூலம் தொடர்பு கொண்­ட­மை­யும் குற்­றப்­பு­ல­னாய்­வுத் துறை­யி­ன­ரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கி­யின் பிணைமுறி­கள் தொடர்­பான விசா­ர­ணையைக் கோப் குழு முன்­னெ­டுத்­தபோது, அந்­தக் குழு­வின் உறுப்­பி­ன­ரான இரா­ஜாங்க அமைச்­சர் சுஜீவ சேன­சிங்­க­வுக்­கும் பேர்­பெச்­சு­வல் நிறு­வ­னத்­தின் அர்­ஜுன் அலோ­சி­ய­ஸுக்­கு­மி­டை­யில் 62 தட­வை­கள் அலை­பேசி உரை­யா­டல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

தவற விடாதீர்கள்:  விமலுக்கு எதிரான வழக்கு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

மேலும், மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ரன் மற்­றும் பேர்­பெச்­சு­வல் நிறு­வனத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி கசுன் பலி­சே­ன­வுக்­கி­டை­யில் இடம்­பெற்ற அலை­பேசி உரை­யா­டல்­­களும் வெளி­வந்­துள்­ளன.

இவ்­வாறு வெளி­வந்­துள்ள தர­வு­கள் சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறிச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாகக் குற்­றப்­பு­ல­ னாய்­வுத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள் ளது.

இதில் 7 அலை­பேசி உரை­யா­டல்­க­ளும், 7 குறுந்­த­க­ வல்­க­ளும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குற்­றப்­பு­ல­ னாய்­வுத் திணைக்­க­ளத்தால், பிணை­முறி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று முன்தினம் அறி­விக்­கப்­பட்­டது.

You might also like