வாள்­வெட்­டுக்­கள் குறித்து – எஸ்.டி.ஐ.ஜி. கள ஆய்வு!

வாள்­வெட்­டுக் கும்­பல்­கள் தாக்­கு­தல் நடத்­திய இடங்­க­ளில் நேற்று நேரடி கள­ஆய்வை மேற்­கொண்­டார் வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொஷான் பெர்­னாண்டோ.

வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளை­யும் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்று பார்­வை­யிட்­டார். காய­ம­டைந்­த­வர்­க­ளி­டம் சம்­ப­வம் தொடர்­பாக நேரில் விசா­ரித்த­றிந்­தார்.

குற்­ற­வா­ளி­களை விரைந்து கைது செய்­வ­தற்­கான முழு முயற்­சி­யில் தாம் இறங்­கி­யுள்­ளார் என அவர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

மேலும், தனது உத்­த­ர­வுக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணத்­தில் பொலி­ஸா­ரால் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா? என்­ப­தை­யும் அவர் ஒவ்­வொரு பகு­தி­க­ளுக்­கும் நேரில் சென்று கண்­கா­ணித்­தார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தவற விடாதீர்கள்:  சங்­கானை சபை மீண்­டும் தமிழ் அர­சின் கட்­டுக்­குள்!

You might also like