காலியில் தொடர்ந்தும் சிறப்புப் பாதுகாப்பு!

காலி பொலிஸ் பிரிவின் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.

வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிந்தோட்டை கிழக்கு, கிந்தோட்டை மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் அந்தப் பகுதிகளில் பொலிஸாருடன், சிறப்புப் அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்கள்:  ஓ.எல். மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!!

You might also like