தமிழ் – முஸ்லிம் உறவைப் பலப்படுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும்

தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கும் வகை­யி்ல் முஸ்­லிம் மக்­கள் நடந்து கொள்­ளக் கூடா­தென முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வர் கூறி­யுள்ள நிலை­யில், வடக்­கு–­கி­ழக்கு இணைப்பு யோச­னைக்கு முஸ்­லிம்கள் தரப்­பி­லி­ருந்து கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது.

வடக்­கும், கிழக்­கும் இணைக்­கப்­ப­டு­மா­னால் நாட்­டில் இரத்த ஆறு ஓடு­மென ராஜாங்க அமைச்­ச­ரான ஹிஸ்­புல்லா எச்­ச­ரிக்கை விடுத் துள்ள நிலை­யில், அமைச்­சர் றிசாத் பதி­யு­தீ­னும் அதைப் போன்­ற­தொரு கருத்தை வௌியிட்­டுள்­ளார். இவர்­க­ளில் முன்­ன­வர் கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்­த­வர்; மற்­றை­ய­வர் வடக்கு மாகா­ணத்­தைப் பிர­தி ­நி­தித்­து­வம் செய்­ப­வர்.

வடக்­கில் தமி­ழர்­க­ளும் கிழக்­கில் முஸ்­லிம்­க­ளும் பெரும்­பான்­மை­யி­னர்

வடக்கு மாகா­ணத்­தில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ள­னர். முஸ்­லிம் மக்­கள் சிறிய எண்­ணிக்­கை­யி­ன­ராக உள்­ள­னர். இதே வேளை கிழக்கு மாகா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் முஸ்­லிம் மக்­களே பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ள­னர். தமி­ழர்­கள் இவர்­க­ளுக்கு அடுத்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­ற­னர். சிங்­க­ள­வர்­கள் மூன்­றாம் இடத்­தைப் பிடித்­துள்­ள­னர்.

வடக்­கும், கிழக்­கும் இணைக்­கப்­பட்­டி­ருந்­த­போது தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யி­னர் என்ற அந்­தஸ்தைக் கொண்­டி­ருந்­த­னர்.தமி­ழர் ஒரு­வரே முத­ல­மைச்­சர் பத­வியை வகிக்க முடிந்­தது. பின்­னர் கூட்­ட­மைப்­பும்,முஸ்­லிம் காங்­கி­ர­சும் இணைந்­த­தொரு ஆட்சி மாகா­ண­
ச­பை­யில் இடம் பெற்று வந்­தது. முஸ்­லிம் ஒரு­வரே முத­ல­மைச்­சர் பத­வியை வகித்து வந்­தார்.

கடந்த செப்­ரெம்­பர் மாதம் 30ஆம் திக­தி­யு­டன் கிழக்கு மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டைந்­த­தால், தற்பொழுது ஆளு­ந­ரின் நிர்­வா­கம்­அங்கு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஒரு நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூல­மாக வடக்­கும் கிழக்­கும் பிரிக்­கப்­பட்­டதை வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருந்­தமை ஈழத் தமி­ழர்­க­ளுக்கு இந்­தியா புரிந்த மிகப்­பெ­ரிய துரோ­க­ மா­கும்.

இரண்டு நாட்­டுத் தலை­வர்­க­ளுக்­கு­ம் இடையே மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­தின் மூல­மாக வடக்­கும் கிழக்­கும் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால்
அப­க­ரிக்­கப்­ப­டும் கிழக்கு மாகா­ணம்

கிழக்கு மாகா­ணம் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­கள் மூல­மாக பெரும்­பான்­மை­யி­ன­ரால் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்தே இது ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டுள்­ளது. இத­னால் பாதிக்­கப்­ப­டு­வது தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­கள்­தான்.

கடந்த காலங்­க­ளில் தமிழ் – முஸ்­லிம் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான உற­வைச் சீர் குலைப்­ப­தற்­குச் சில தீய சக்­தி­கள் முனைப்­பு­டன் செயற்­பட்டு வெற்­றி­யும் பெற்­றன. இந்த இரண்டு இனங்­க­ளுக்­கு­மி­டை­யில் மோதல்­கள் ஏற்­பட்­ட­தற்­கும் இதுவே முதன்மைக் கார­ண­மா­கும். வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம் மக்­கள் இதன்­பின்­ன­ணி­யி­லேயே வௌியேற்­றப்­பட்­ட­னர்.

இந்த நாட்­டி­லுள்ள பேரி­ன­வா­தத் தரப்­பி­னர்­கள் இந்த இரண்டு இனங்­க­ளும் ஒன்று சேராது தடுப்­ப­தில் மிக­வும் கவ­ன­மா­கச் செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

மறைந்த முஸ்­லிம் மக்­க­ளது, தலை­வர் அஷ்­ரப்­பி­னால் முஸ்­லிம்­க­ளின் தனித்­து­வத்­தைப் பேணவென அமைக்­கப்­பட்ட சிறிலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் இன்று பல துண்­டு­க­ளாக உடைந்து காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­கள் கிழக்­கில் மீண்­டும் காலூன்­று­வ­தற்கு இது வாய்ப்­பாக அமைந்­துள்­ளது.

என்­ன­தான் தனித்­து­வம் என்று கூறிக் கொண்­டா­லும், முஸ்­லிம் கட்­சி­கள் தெற்­கில் உள்ள பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தையே காண­மு­டி­கின்­றது. இதன் மூல­மாக முஸ்­லிம் சமூ­கத்­த­வர்­கள் உயர் பத­வி­க­ளை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

கிழக்கு மாகா­ண­ச­பை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் ஒரு தமி­ழரோ அல்­லது முஸ்­லிம் ஒரு­வரோ முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ரு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. இந்த விட­யத்­தில் கூட்­ட­மைப்பு விட்­டுக் கொ­டுத்து நடந்­துள்­ளது. இத­னால் முஸ்­லிம் ஒரு­வர் அந்­தப்­ப­த­வியை வகிக்க முடிந்­தது.

வடக்­கும் கிழக்­கும் இணைந்து விட்­டால் இந்த வாய்ப்­புத் தமக்­குக் கிடைக்­காது போய்­வி­டு­மென்ற அச்­சம் முஸ்­லிம்­கள் மத்­தி­யில் உண்டு.

தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் இணைந்து செயற்­பட்­டால் அது பல­மிக்க தரப்­பாக ஆகும்

தமி­ழர்­க­ளும், முஸ்­லிம்­க­ளும் மொழி­யால் ஒன்­று­பட்­ட­வர்­கள். மதத்­தால் மட்­டும் வேறு­பட்­ட­வர்­கள். சிறு­பான்­மை­யி­னத்­த­வர் என்ற வரை­ய­றைக்­குள் இவ்­விரு இனத்­த­வர்­க­ளும் அடங்­கு­கின்­ற­னர். அத் தோடு இவ்விரு இனத்தவர்களும் பாதிப்­புக்­க­ளை­யும் எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்த இரண்டு இன மக்­க­ளும் ஒரே பாதை­யில் பய­ணித்­தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வில் முன்­னேற்­றம் ஏற்படும். தந்தை செல்வா முஸ்­லிம் மக்­களை ஒரு­போ­தும் கைவிட்­டது கிடை­யாது. தற்­போது தமி­ழ் அரசுக் கட்­சித் தலை­வ­ரான மாவை சேனா­தி­ரா­சா­வும் முஸ்­லிம் மக்­க­ளு­டான உறவு தொடர்­பா­கச் சிலா­கித்­துக் கருத்­துக்­களை வௌி யிட்டு வரு­கின்­றார்.

அதேவேளை முஸ்­லிம் தலை­வர்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தைக் காண முடி­ய­வில்லை.முஸ்­லிம் மக்­கள் நாட்­டின் பல பாகங்­க­ளி­லும் செறிந்து வாழ்­கின்­ற­னர். பெரும்­பான்­மை­யின மக்­க­ளு­ட­னும் இணைந்து வாழ வேண்டிய சூழ்­நி­லை­யில் அவர்­கள் உள்­ள­னர். இத­னால் அவர்­களை அனு­ச­ரித்­துப்­போ­க­வேண்­டிய தேவை­யும் அவர்­க­ளுக்கு உள்­ளது. கிழக்கு மாகா­ணத்­தின் சில இடங்­க­ளி­லும்­கூட இவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் வடக்­கும் கிழக்­கும் இணைந்து விட்­டால் தமி­ழர்­கள் மட்­டு­மல்­லாது முஸ்­லிம் மக்­க­ளும் பாது­காப்­பு­டன் வாழ முடி­யும்.

இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் இணைந்து விட்­டால் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ரின் அச்­சு­றுத்­தல் க­ளுக்கு ஈடு­கொ­டுத்­துச் செயற்­பட முடி­யும். முத­லில் தமிழ் மக்­கள் தொடர்­பாக முஸ்­லிம் மக்­க­ளி­டம் காணப்­ப­டு­கின்ற தப்­ப­பிப்­பி­ரா­யங்­கள் அகற்­றப்­பட வேண்­டும். இதை முஸ்­லிம் தலை­வர்­களே முன்­னின்று செயற்­ப­டுத்த வேண்­டும்.

You might also like