Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­பில் செயற்­பட வேண்­டுமா? என்ற கேள்வி மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.அவர் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­றார்.

தமது கொள்­கை­களை அடிக்­கடி மாற்­றிக் கொள்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ளார். தனது தேர்­தல் அறிக்­கை­யில் இருந்து கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டாது இருந்­தி­ருக்­கு­மே­யா­னால், அதில் பிளவு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­காது என­வும், ஒற்­றை­யாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைவிட்­டமை, மிகப்­பெ­ரிய தவறு என­வும் அவர் அண்­மை­யில் கருத்து வௌியிட்­டி­ருந்­தார்.ஆனால் கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்சி நடை­மு­றையை ஒரு­போ­துமே கொள்­கை­ய­ள­வில் ஏற்­றுக் கொண்­ட­தில்லை.

ஒற்­றை­யாட்சி என்ற பதம்
ஏற்­ப­டுத்தி வைத்த குழப்­ப­நிலை

புதிய அர­ச­மைப்­புச் சபையை வழி­ந­டத்­தும் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற சொல் எந்த இடத்­தி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஒரு­மித்த தேசம் என்ற சொல்லே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் விக்­னேஸ்­வ­ரன் தவ­றான தக­வல்­களை வழங்கி மக்­க­ளைக் குழப்ப முற்­ப­டு­ கின்­றார். ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்­ட­மைப்­பைப் பிள­வு­ப­டுத்­தும் வகை­யில் நடந்து கொள்­ளக் கூடா­தெ­னக் கூறிய முத­லமைச்­சர், தற்­போது கூட்­ட­மைப்­பையே குற்­றம் சாட்­டு­வது ஏற்­கத் தக்­க­தல்ல.

கொழும்­பி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்தி வைக்­கப்­பட்ட விக்­னேஸ் வ­ரன், தமி­ழர்­கள் எதிர்­கொண்ட துய­ரங்­களை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்­த­வ­ரல்ல. கொழும்­பில் வசதி வாய்ப்­புக்­க­ளு­டன் வாழ்ந்­த­வர்­தான் அவர். இவர் அவ்­வப்­போது தெரி­வித்து வரும் கருத்­துக்­கள் முத­ல­மைச்­சர் மீது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அவர் இணைத் தலை­வ­ரா­கப் பதவி வகிக்­கும் தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது, அர­சி­யல் சார்ந்த விட­யங்­க­ளில் பேரவை தலை­யி­டா­தெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது. அர­சி­யல்­வா­தி­க­ளும், வெவ்­வேறு துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் பேர­வை­யில் பங்கு கொண்­டி­ருந்த போதி­லும், இவ்­வா­றா­ன­தொரு உறுதி மொழி அப்­போது வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தொடர்­பான அறி­விப்பு வௌியா­ன­தும், பேரவை அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­விட்­டது.

வேட்­பா­ளர் தெரிவு தொடர்­பாக ஆரா­யும்­பொ­ருட்டு கூட்­ட­மொன்­றுக்­கும் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்­தக் கூட்­டத்­தில் விக்­னேஸ்­வ­ர­ னும் கலந்து கொண்­டி­ருந்­தார். அது மட்­டு­மல்­லாது அங்கு உரை­யொன்­றை­யும் ஆற்­றி­யி­ருந்­தார்.

இவ­ரொரு நேர்­மை­யா­ன­வ­ராக இருந்­தி­ருந்­தால் பேரவை தனது கொள்­கை­யி­லி­ருந்து வில­கிச் சொல்­வதை அறிந்­த­தும் அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க வேண்­டும். ஆனால் அவ்­வாறு செய்­யா­மல் தாம் சார்ந்­தி­ருக்­கும் கூட்­ட­மைப்பை விமர்­ச­னம் செய்­வதை எவ­ரா­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதே­வேளை தமிழ் ஊட­க­மொன்று விக்­னேஸ்­வ­ர­னைத் தமிழ் மக்­கள் தமது தலை­வ­ராக ஏற்­றுக் கொண்­டு­விட்­ட­னர் எனத் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு முத­ல­மைச்­சரை தமிழ் மக்­கள் தமது
தலை­வ­ராக ஏற்­றுள்­ள­னரா?

ஆனால் எந்­தச் சந்­தர்ப்­பத்­தில் அவர் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டார் என்­பது எவ­ருக்­குமே புரி­ய­வில்லை. விக்­னேஸ்­வ­ர­னும் இதை ஏற்­றுக்­கொள்­ப­வர் போன்று அமை­தி­யைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்.

எந்­த­வொரு மனி­த­னா­லும் இரண்டு தோணி
க­ளில் கால்­களை வைத்­துப் பய­ணிக்க முடி­யாது. இவ்­வாறு நடந்து கொண்­டால் நீரில் மூழ்க வேண்­டிய நிலை­தான் ஏற்­ப­டும். வடக்கு முத­ல­மைச்­ச­ரும் தற்­போது இவ்­வா­று­தான் நடந்து கொள்­கின்­றார். இது அவ­ருக்கே நல்­ல­தல்ல.

உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் இடம் பெறும்­போது விக்­னேஸ்­வ­ர­னின் உண்­மை­யான முகம் தெரிந்து விடும். அவ­ரைப் போற்­றிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் தூற்ற வேண்­டிய நிலை­யும் உரு­வா­கி­வி­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை இனி மேலா­வது இவ­ரது விட­யத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் இனி­யும் பொறுத்­துக்­கொண்டு இருக்க மாட்­டார்­கள் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்­டும்.

ஆரம்­பத்­தில் இருந்தே தன்­னிச்­சைப் போக்­கை
கடைக்­கொண்டார் முத­ல­மைச்­சர்

வடக்கு மாகா­ண­ச­பை­யில் ஏற்­பட்ட குழப்­பங்­க­ ளுக்கு முத­ல­மைச்­சரே கார­ண­மாக இருந்­துள்­ளார். அவர் நடு நிலை தவ­றாது நடந்து கொண்­டி­ருந்­தால் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வர வேண்­டிய அவ­சி­ய­மும் எழுந்­தி­ருக்­காது. அதன் பின்­னர் அவர் நடந்து கொண்ட வித­மும், ஏற்­றுக் கொள்­ளத் தக்­க­தாக அமைந்­தி­ருக்­க­வில்லை. தம்­மைக் கூட்­ட­மைப்­பி ­லி­ருந்து வேறு­ப­டுத்­திக் காட்­டவே அவர் முனைந்­தார்.

இத­னால் கூட்­ட­மைப்­புக்­கும், தமி­ழ­ர­சுக் கட்­சிக்­கும் எதி­ரா­ன­வர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­னர். விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தன் மூல­மா­கத் தமது நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தில் ஈடு­பட்­ட­னர். ஆனால் மக்­கள் விரை­வி­லேயே உண்­மை­யைத் தெரிந்து கொண்­டு­விட்­ட­னர்.

அடுத்த ஆண்டு இடம்­பெ­றப்­போ­கும் வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­த­லில் வடக்கு முத­ல­மைச்­சர் பத­விக்கு போட்­டி­யி­டத் தாம் தெரிவு செய்­யும் வேட்­பா­ளர் குறித்து கூட்­ட­மைப்பு கூடிய கவ­னம் செலுத்த வேண்­டும். தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு­வரை முத­ல­மைச்சர் பத­விக்­கான வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்பு தெரிவு செய்ய வேண்­டும்.

இறக்­கு­ம­தி­க­ளுக்கு எந்த வகை­யி­லும் இட­ம­ளிக்­கக் கூடாது. அதற்கு முன்­னர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்­பாக ஒரு தீர்க்­க­மான முடிவை கூட்­ட­மைப்­பின் தலைமை எட்ட வேண்­டும்.