தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா?

நாட்­டின் பொது நிர்­வா­கத் துறை­யா­ன­போ­தி­லும் சரி, இல்­லை­யேல் கலை, கலா­சார விட­யங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட துறை­யான போதி­லும் சரி, இன்­றைய கால­கட்­டத்­தில், அதி­லும் மிக அண்­மைக்­கா­ல­மாக நாட்டு மக்­க­ளது வாழ்­வி­ய­லில் அர­சி­யல் தலை­யீடு, அர­சி­யல் கலப்பு தவிர்க்க முடி­யா­த­தொரு அம்­ச­மாக ஆகி­விட்­டுள்­ளது.

அபி­வி­ருத்­தி­ அடைந்த மேலை­நா­டு­கள் பல­வற்­றி­லும் அர­சி­யல் ஒரு தனித்­து­றை­யா­கச் செயற்­பட்டு அர­சி­யல் நாக­ரிகத்­து­ட­னான, கன­வான்­த­னத்­து­டன் கூடிய, ஒரு பொருத்­த­மான, தேவை­யான முடி­வு­களை மேற்­கொண்டு அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வழி­காட்­டும் ஒரு நிர்­வாக இயந்­தி­ர­மா­கவே செயற்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக அத்­த­கைய அபி­வி­ருத்தி அடைந்த நாடு­க­ளி­லும்கூட அர­சி­ய­லில் ஊழல் மோச­டி­க­ளும், நேர்­மை­யற்ற , நீதி நியா­யத்­துக்கு மதிப்­ப­ளிக்­கத்­த­வ­றும் ஒரு சுய­ந­ல­வாத அர­சி­யல் போக்­கில் அர­சுத் தலை­வர்­கள் செயற்­ப­டு­வது வழக்­க­மான ஒன்­றா­க­ ஆ­கி­விட்­டுள்­ளது.

தரம் தாழ்ந்­து­போன இலங்­கை­யின்
அர­சி­யல் நில­வ­ரம்

இத்­த­கைய கள­நி­லை­யில் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­கள் வரி­சை­யில் உள்ள இலங்­கை­யின் அர­சி­யல் நில­வ­ரம் எந்த அள­வுக்­குத் தரம் தாழ்ந்து போயி­ருக்­கி­றது என்­ப­தற்கு ஓரி­ரண்டு என்­றல்ல, எத்­த­னை­யோ­ உ­தா­ர­ணங்­களை முன்­வைக்க இய­லும். தமிழ் இனத்­தையே இந்த நாட்­டி­லி­ருந்து ஒட்­டு­மொத்­த­மாக இல்­லா­தொ­ழிக்­கும் முனைப்­பில் செயற்­பட்ட ராஜ­பக்ச தரப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து, இந்த நாட்­டின் தமி­ழி­னம் எப்­ப­டித் தப்­பிப் பிழைக்­கப் போகி­றது என்ற அச்­ச­மும் விரக்­தி­யும் தமிழ் மக்­கள் மத்­தி­யில் குடி­கொண்­டி­ருந்த ஒரு கால­கட்­ட­மும் இருந்­தென்­னமோ உண்­மை­ தான்.

ஆயி­னும் அர­சி­யல் சூழல் மாற்­றம், திடீ­ரென ஏற்­பட்­ட­தொரு திருப்­பம், இந்த நாட்­டின் தமிழ் பேசும் மக்­க­ளது வாக்­குப் பலமே நாட்­டின் அடுத்த தலை­மைத்­து­வத்­தைத் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யாக ஆகி, பேரம் பேசத்­தக்­க­தொரு பலத்தைத் தமிழ்த் த­ரப்­பு­க­ளது கைக­ளில் வழங்­கி­யது. எப்­படி அன்று விடு­த­லைப் புலி­க­ளது தலை­மைத்து­வத்­தின் முடி­வுக்கு மதிப்­ப­ளித்து அந்த முடிவை ஏற்று ஈழத்­த­மிழ் மக்­கள் செயற்­பட்­டார்­களோ, அதே­போன்று தந்தை செல்வா வழி­வந்த தமிழ்த் தலை­மைத்து­வங்­க­ளின் ஒன்­றி­ணைந்த முடி­வுக்கு மதிப்­ப­ளித்து, நாட்­டின் புதிய தலை­மைத்­து­வ­மொன்­றின் மீது நம்­பிக்கை வைத்­துத்­தான் பார்ப்­போமே என்ற கருத்­துக்கு மதிப்­ப­ளித்து, ஒட்­டு­மொத்­தத் தமிழ் மக்­க­ளும் ஒன்று திரண்டு இலங்கை அர­சி­ய­லில் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­திக் காட்­டி­னர்.

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கை­க­ளை சித­ற­டித்து விட்­டுள்ள மைத்­திரி அரசு

நம்­பிக்­கை­தான் மனித வாழ்க்­கை­யில் அடிப்­படை என்­பார்­கள். ஈழத் தமிழ் இனத்­தின் நியா­ய­மான உரி­மை­களை வழங்கி இந்த நாட்­டில் அமை­தி­யை­யும் சுபீட்­சைத்­தை­யும் ஏற்­ப­டுத்துவார்­கள் என்ற நம்­பிக்­கை­யில் புதிய தலை­மைத்­து­வ­மொன்று நாட்­டின் நிர்­வா­கத்­தைக் கையேற்க பெரு­ம­ள­வில் பங்­க­ளிப்பு வழங்கி வைத்த ஈழத்­த­மிழ் மக்­க­ளது அத்­தனை எதிர்­பார்ப்­புக்­க­ளை­யும் சித­ற­டிக்­கும் வகை­யில், இன்­றைய கூட்டு அரசு, ஈழத் தமிழ் மக்­க­ளது காதில் பூச்­சுற் றும் விதத்­தில் , உனக்­கும் ‘பெப்பே’, உன் அப்­ப­னுக்­கும் ‘பெப்பே’ என்ற விதத்­தில் செயற்­பட்­டு­வ­ரு­கி­றது.

இத்­த­னைக்­கும் ஈழத் தமிழ் மக்­கள் ஓர­ணி­யில் திரண்டு நின்று ஒற்­று­மையே எமது பலம் என்­பதை உல­குக்கு உணர்த்தி வரு­கிறார்­கள் எனப் பெரு­மைப்­பட்­டுக் கொண்ட நாங்­கள், இன்று எமக்­குள்­ளேயே பிள­வு­பட்டு கன்னை பிரிந்து, சின்­னா­பின்­ன­மா­கிப் போய்­விட நேர்ந்­து­வி­டுமோ என அஞ்­சும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

போரி­னால் முற்­று­ மு­ழு­ தா­கப் பாதிப்­புற்று, பல வழி­க­ளி­லும் தோல்­விக­ளா­லும் வாழ்க்­கைச் சிர­மங்­க­ளா­லும் நொந்து போயுள்ள எமது தமிழ் உற­வு­கள் எதிர்­நோக்­கும் பல­த­ரப்­பட்ட வாழ்­வி­யல் சிர­மங்­கள், தேவை­க­ளில் பல­வற்­றுக்கு இலகுவில் தீர்வு கண்டு உத­வத்­தக்க வாய்ப்­பி­ருந்­தும், மைத்­திரி– ரணில் கூட்டு அரசு, பேரி­ன­வா­தத்­த­ரப்­புக்­க­ளது எதிர்்ப்­பு­க­ளுக்கு அஞ்சி, தமிழ் மக்­க­ளது நியா­ய­மான பல கோரிக்­கை­களை மூர்க்­கத்­த­ன­மாக மறு­த­லித்­துப் புறக்­க­ணித்து வரு­கின்­றது.

இந்த நிலை­யில் இன்­ன­மும் எமது தமிழ்த் தலை­மைத்­து­வம் இணக்க அர­சி­யல் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் மைத்­திரி அர­சுக்கு ஆத­ரவு வழங்­கத்­தான் வேண்­டுமா? என்ற கடும் விமர்­ச­னம் எம்­ம­வர்­கள் பல­ரா­லும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கொஞ்­சம் பொறுத்­துத்­தான் பார்ப்­போமே என்ற கருத்தை ஆதரிக்கும் சில தமிழ்த் தரப்பினர்

ஆனா­லும் இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில், புதிய அர­ச­மைப்­பின் மூலம் ஈழத்­த­மிழ் மக்­க­ளது பல­த­ரப்­பட்ட சிக்­கல்­க­ளுக்கு ஓர­ள­வே­னும், பகு­தி­ய­ள­வி­லான நிவா­ர­ணம் தானும் கிட்­டக்­கூ­டும் என்ற எமது புத்­தி­ஜீ­வி­கள் தரப்­பி­னர்­க­ளது கருத்­தைக் கணக்­கில் கொண்டு இன்­ன­மும் கொஞ்­சம் பொறுமை காத்­துத்­தான் பார்ப்­போமே என்று கரு­தும் ஒரு தரப்­பி­ன­ரும் எம் மத்­தி­யில் இருக்­கவே செய்­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் இத்­தனை கால­மும், ஆளா­ளுக்கு என்­ன­தான் கருத்து வேறு­பா­டு­க­ளைக் கொண்­டி­ருந்­தா­லும், ஒரு கூட்­டுப் பற­வைக­ளாக, ஒற்­று­மையே எமது பலம் என்ற நிலை­யில் இருந்து வந்த எமது தமிழ் அர­சி­யல் தரப்­பி­னர், இன்று ஆளுக்கு ஆள் கன்னை பிரிந்து ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நாக­ரி­க­ மற்ற விதத்­தில் விமர்சித்துத் தூற்றி வரு­வ­தைக் காண ஒரு­பு­றம் விரக்­தி­யும், மறு­பு­றத்­தில் ‘‘அட­போ­யும் போயும் கடை­சி­யில் நீங்­கள் அத்­த­னை­பே­ருமே வெறும் பத­விக்­கும் அதி­கா­ரத்­துக்­கும் ஆலாய்ப் பறப்­ப­வர்­கள்­தானா?’’ என்ற ஆத்­தி­ர­மும் மேலி­டு­கி­றது.

தென்­ப­குதி அர­சி­ய­லில் முன்­னாள் மற்­றும் இந்­நாள் அரச தலை­மைத்­து­வங்­கள் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் எந்­த­அ­ள­வுக்கு தமக்கு ஆதரவு உண்டு என்­பதை நாடி பிடித்­துப் பார்க்­கும் தேர்­த­லாக, உல­கத்துக்கு உறு­திப்­ப­டுத்­தும் தேர்­த­லாக இடம்­பெ­ற­வுள்­ளது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்.

அதே­ச­ம­யம், ஓர­ணி­யில் நின்று தமிழ் மக்­க­ளது ஏகப் பிர­தி­நி­தி­கள் நாமே என்று பெருமை பாராட்­டிக் கொண்ட எமது தமிழ்த் தரப்­பி­னர்­கள் ,சேர, சோழ, பாண்­டி­யர் காலத்­தி­லி­ருந்தே தமிழ் இனம் ஒரு­ போ­தும் நீண்­ட­கா­லம் ஒற்­று­மை­யாக இருந்­த­தில்லை என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில், கன்னை பிரிந்து ஆளுக்கு ஆள் ஒவ்­வொரு கதை சொல்­லிக் கொண்டு எங்­க­ளி­டம் வாக்­குப்­பிச்சை கேட்டு வரப் போகி­றீர்­கள் என்­பதை நினைக்­கத்­தான் மனது கனக்­கி­றது.

என்­னமோ போங்­கள்; தமிழ் மக்­க­ளது முடிவு எந்தத் தரப்பினர்களுக்குச் சாத­க­மாக அமை­யப் போகி­றது; எவர் களுக்கு ஏமாற்­றத்தை வழங்­கப் போகி­றது என்­பதை உறுதி செய்ய இன்­ன­மும் காலம் கனி­ய­வில்லை என்­ப­தைத் தவிர வேறென்­னத்­தைச் சொல்ல?

You might also like