5 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுகிறது

உல­கில் 5 நிமி­டங்களுக்கு ஒரு குழந்தை வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்று டுபா­யில் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மான பன்­னாட்டு குழந்­தை­கள் தின மாநாட்­டில் வைத்து அதிர்ச்­சித் தக­வல் வெளி­யி­டப்­பட்­டது.

பன்னாட்டு குழந்­தை­கள் வன்­முறை மற்­றும் புறக்­க­ணிப்­புக்கு எதி­ரான அமைப்பு சார்­பில் அரபு நாடு­க­ளின் பிராந்­தி­யத்­தில் 5ஆவது பன்­னாட்­டுக் குழந்­தை­கள் தின மாநாடு டுபா­யில் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மா­னது.

இந்த அமைப்­பின் தலை­வர் துபைல் முகம்­மது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இந்த ஆண்டு பன்­னாட்டு குழந்­தை ­கள் தின­மா­னது ‘சட்­டத்­தில் இருந்து செயற்பாடு வரை’ என்ற கருப்பொ­ரு­ளில் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

அரபு நாடு­கள் எவ்­வாறு தங்­கள் நாடு­க­ளில் குழந்­தை­கள் வன் கொ­டு­மையை தடுத்து அவர்­க­ளுக்கு உரிய பாது­காப்பு அளித்­துள்­ளன என்­பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது.

உல­கம் எதிர்­கொள்­கின்ற சவால் க­ளில் மிக முக்­கி­ய­மா­னது குழந்­தை­ கள் மீதான வன்­மு­றை­யா­கும்.

குழந்­தை­கள் வெளி­யில் இருந்து மட்­டு­மல்ல. தாங்­கள் வசிக்­கும் வீடு­க­ளில் பெற்­றோ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள், உற­வி­னர்­கள், ஆசி­ரி­யர்­கள் என தமது சுற்று வட்­டா­ரத்­தி­லேயே வன்­மு­றையை எதிர்­கொள்­ளும் கொடு­மை­கள் நிகழ்­கி­ன்றன.

உல­கில் எடுக்­கப்­பட்ட புள்ளி விவ­ரங்­க­ளின்­படி ஒவ்­வொரு 5 நிமி­டங்­க­ளுக்­கும் ஒரு குழந்தை வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­கி­றது. சில நேரங்­க­ளில் அந்­தக் குழந்­தை­கள் வன்­கொ­டு­மை­யால் உயி­ரி­ழக்­கும் பரி­தா­ப­மும் நிகழ்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றது.

குழந்­தை­கள் மீதான வன்­மு­றையை தடுக்­கும் வழி­மு­றை­கள் மற்­றும் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­ கள் நல­னுக்­காகச் செய்ய வேண்­டிய வழி­மு­றை­கள் குறித்து ஒவ்­வொரு நாடும் கவ­னம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like