பாசக்­கார நாய்!

தனது உரி­மை­யா­ள­ரைக் காணாது உணவு ஒறுப்­பில் ஈடு­பட்டு உயி­ரி­ழந்­துள்­ளது ஒரு நாய். இந்­தச் சம்­ப­வம் கொலம்­பி­யா­வில், வானூர்தி நிலை­ய­மொன்­றில் இடம்­பெற்­றது.

கடந்த மாதம் உரி­மை­யா­ள­ரு­டன் வானூர்தி நிலை­ யத்­துக்கு வந்­தது இந்த இரண்டு வயது நாய். உரி­மை­யா­ளர் ஏனோ இந்த நாயை அழைத்­துச் செல்­லா­மல், தனியே சென்­று­விட்­டார்.

உரி­மை­யா­ளரை நீண்ட நேர­மா­கக் காண­வில்லை என்­ற­தும் நாய் சிறிது பதற்­ற­ம­டைந்­தது. வானூர்தி நிலை­யத்­தின் ஒவ்­வொரு பகு­திக்­கும் சென்று தேடிப் பார்த்­தது.

புதி­தாக உள்ளே வரு­ப­வர்­க­ளில் ஒரு­வர் தன் உரி­மை­யா­ள­ராக இருக்­க­லாம் என்ற ஆர்­வத்­து­டன் அங்­கும் இங்­கும் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. நாள்­கள் நகர்ந்­தன.
ஆனால் உரி­மை­யா­ளர் திரும்பி வர­வே­யில்லை.

மன­மு­டைந்து போன நாய், வானூர்தி நிலைய ஊழி­யர்­க­ளும் பய­ணி­க­ளும் கொடுத்த உண­வு­க­ளைச் சாப்­பி­டா­மல் புறக்­க­ணித்தது. தண்­ணீர் பரு­கு­வ­தை­யும் கைவிட்­டது.

நாளுக்கு நாள் உடல் மெலிந்­தது. மன அழுத் தத்­துக்கு உள்­ளா­னது. நடக்­கக்­கூ­டத் தெம்பு இல்­லாத நிலை­யி­லும் உரி­மை­யா­ளர் வந்­து­விட மாட்­டாரா என்று ஏங்­கிக்­கொண்­டி­ருந்­தது.

இறு­தி­யில் நாயின் நிலை­யைக் காணச் சகிக்­கா­மல், கால்­நடை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். அங்கே நாய்க்கு மருந்­தும் திரவ உண­வும் செலுத்­தப்­பட்­டன. ஆனால் 48 மணி நேரத்­தில் நாய் இறந்­து­விட்­டது.

‘‘இது இளம் நாய். எந்­த­வித நோயும் இந்த நாய்க்கு இல்லை. மன அழுத்­தம் ஒன்று மட்­டுமே அது­வும் சமீப காலங்­க­ளில் இருந்­தி­ருக்­கி­றது. மன அழுத்­தம் கார­ண­மா­கக் கூட முரட்­டுத்­த­னமோ, கோபமோ இந்த நாயி­டம் பார்க்க முடி­ய­வில்லை. மிக­வும் அன்­பான நாய். ஒரு­வ­ரின் அன்­புக்­காக ஏங்கி, மனம் உடைந்து, தன் இறப்­பைத் தானே தேடிக்­கொண்­டது வருத்­த­ம­ளிக்­கி­றது’’ என்­கி­றார் கால்­நடை மருத்­து­வர் சோட்­டோ­மோன்ட்.

You might also like