நிதியமைச்சரின் அறிவிப்புக்கள் வடக்கின் அபிவிருத்திக்கு உதவ வேண்டும்

நிதி­ய­மைச்­சர் மங்­கள சமரவீர­வி­னால் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அடுத்த ஆண்­டுக்­கா­ன­வ­ரவு செல­வுத் திட்­டத்­தில் வடக்கு மாகா­ணத்­துக்­குரிய சில அறி­விப்­புக்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.

வடக்­கி­லி­ருந்து இடம் பெயர்ந்து சென்ற முஸ்­லிம் மக்­க­ளுக்கு 2.6 பில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு, யாழ்ப்­பா­ணத்­தில் நவீன பொரு­ளா­தார மையம், மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­முக அபி­வி­ருத்தி, சிறிய தொழிற்­து­றை­க­ளுக்கு 100 கோடி ரூபா ஒதுக்­கீடு, கடன் சுமை­யில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு குறைந்த வட்­டி­யில் கடன் திட்­டம், வடக்­கில் 50,000 கல்­வீ­டு­கள், முன்­னாள்­போ­ரா­ளி ­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கு­கின்ற நிறு­வ­னங்­க­ளுக்கு சலு­கை­கள், போரி­னால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் பொருட்டு 750 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு, அச்­சு­வேலி கைத்­தொ­ழிற்­பேட்­டையை மேம்­ப­டுத்­தல் ஆகி­ய­வையே அந்த அறி­விப்­புக்­க­ளா­கும்.

வட­ப­கு­தி­யின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற வேண்­டிய பொறுப்பு அர­சுக்கு உள்­ளது

போரி­னால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட வடக்கு மாகாண மக்­கள் இன்­ன­மும் போரின் தாக்­கத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யாது நிலை­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்குக் கைகொ­டுத்து உதவ வேண்­டி­யது அர­சின் பிர­தான கட­மை­யா­கும். குறிப்­பாக, பொரு­ளா­தார ரீதி­யில் நலி­வுற்­றி­ருக்­கும் அவர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தன் மூல­மாக அவர்­க­ளின் நிலையை மேம்­ப­டுத்த முடி­யும்.

ஒரு பிர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­கள் தமது வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த வேண்­டு­மா­னால் தொழில் வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றி­ருக்க வேண்­டும். ஆனால் வடக்­கில் இன்று பலர் வேலை வாய்ப்­புக்­க­ளைப் பெற­மு­டி­யாத நிலை­யில் உள்­ள­னர். இத­னால் வரு­மா­னத்தை ஈட்ட முடி­யாத நிலை­யி­லும் இவர்­கள் காணப்­ப­டு­கின்­ற­னர்.

வடக்­கில் பொரு­ளா­தார மைய­மொன்று அமைக்­கப்­ப­டு­மென நிதி­ய­மைச்­சர் தமது வரவு செல­வுத்­திட்ட உரை­யின்­போது குறிப்­பி்ட்­டி­ருந்­தார். ஆனால் அந்த மையம் தொடர்­பான மேல­திக தக­வல்­கள் கிடைக்­க­ வில்லை. ஆனா­லும் வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்­குப் பயன்­ப­டும் வகை­யில் இது அமைக் கப்­பட வேண்­டும். குறிப்­பாக வேலை­யற்­றி­ருக்­கும் வட­ப­குதி இளை­ ஞர்­க­ளைக் கை தூக்கி விடும் வகை­யில், முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் ஆண்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­கள் வழங்­கப்­பட வேண்­டும். இதன் மூல­மாக வடக்கி­லுள்ள குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை விருத்தி செய்ய முடி­யும்.

2018ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் வட­ப­கு­திக்­கும் கணி­ச­மான நிதி

வடக்­கில் சிறிய தொழில்­களை ஊக்­கு­விக்­கும் செயற்­பா­டு­க­ளுக்­கென 100 கோடி ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. போருக்கு முந்­திய காலப்­ப­குதி நினை­வுக்கு வரு­கின்­றது. கண்­ணா­டிப் பொருள்­களை உற்­பத்தி செய்த நிறு­வ­னம் ஒன்று யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லுள்ள நீர்­வே­லி­யில் வெற்­றி­க­ர­மாக இயங்கி வந்­தது.

இதில் பல இளை­ஞர்­க­ளுக்கும், யுவ­தி­க­ளுக்­கும் வேலை வாய்ப்­புக்­கிட்­டி­யது, உற்­பத்தி செய்­யப்­பட்ட கண்­ணா­டிப் பொருள் க­ளை­விற்­பனை செய்­த­தன் மூல­மாக வடக்­கின் பொரு­ளா­தார முன்­னேற்­றத் துக்­குக் கணி­ச­மான அளவு பங்­க­ளிப்பு வழங்­கப்­பட்­டது. வீடு­கள் தோறும் கைத்­தொ­ழில் ரீதி­யில் துணி­யி­லான பாவ­னைப் பொருள்­கள் தயா­ரிக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்­டன.

இத­னால் பெண்­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­புக் கிடைத்­த­து­டன் அவர்­க­ளின் குடும்ப வரு­மா­ன­மும் உயர்­வ­டைந்­தது. வல்­லை­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த மின்­சா­ரத்­தில் இயங்­கிய தறி­க­ளின் மூல­மாக ஏரா­ள­மான தர­மான துணி­யி­லான பொருட்­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டன. மக்­கள் இவற்றை அதிக ஆர்­வத்­து­டன் வாங்­கிச் சென்­ற­தைக் காண முடிந்­தது.

அதேபோன்று புத்­தூ­ரில் அமைந்­தி­ருந்த மின்தறியி­லும் தர­மான துணி­வ­கை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு கொழும்­பி­லுள்ள சந்­தை­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. இவற்­றுக்கு நாடு தழுவிய ரீதியில் அதிக வர­வேற்­புக் காணப்­பட்­டது. இதை விட பண்­டத்­த­ரிப்­பில் இயங்­கிய மின் தறி­க­ளைக் கொண்ட தொழிற்­சாலை மிக­வும் பிர­சித்தி பெற்றிருந்தது. இதன் உற்­பத்­தி­க­ளுக்கு நாடு தழு­விய ரீதி­யில் மதிப்­புக் காணப்­பட்­டது.

இவற்றை விட யாழ் நகர் உட்­பட வடக்­கின் வேறு பகு­தி­க­ளி­லும் தறி­கள் மூலம் துணி­ வ­கைக­ளை­யும், துணி­யி­னா­லான பொருள்­க­ளை­யும் உற்­பத்தி செய்யப் பட்டமை­ குறிப்­பி­டத் தக்­கது. போர் கார­ண­மா­க இவற்றின் செயற்­பா­டு­கள் நின்றுவிட்­டன. அது­மட்­டு­மல்­லாது குறித்த தறி­கள் இயங்கி வந்த கட்­ட­டங்­க­ளும், அழி­வ­டைந்து விட்­டன.
அழி­வ­டைந்த நிலை­யில் காணப்­ப­டும் .

இந்­தத் தொழிற்­று­றைக்­குப் புத்­து­யிர் ஊட்­டு­வ­தன் மூல­மா­கப் பல­ருக்கு வேலை வாய்ப்பை வழங்­க­மு­டி­யும் என்­ப­து­டன், வடக்­கின் பொரு­ளா­தா­ரத்­தை­யும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடி­யும்.

போர் கார­ண­மாக செயற்­பாடு தடைப்­பட்ட  வட­ப­குதி மக்­க­ளுக்கு உதவ வேண்­டி­யது அர­சின் கடமை

இவ்­வாறு போருக்கு முன்­னர் இலா­ப­க­ர­மாக இயங்கி வந்த வடபகுதியின் பல கைத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் போருக்­குப் பின்­ன­ரான கால­கட்­டத்­தில் இயங்­காத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. போதிய நிதி­யு­தவி, கட­னு­தவி என்­ப­வற்றை வழங்­கு­வ­தன் மூல­மாக இவற்­றை­யும் மீள இயங்­க­வைக்க முடி­யும்.

போர் கார­ண­மாக வடக்­கில் ஏரா­ள­மான வீடு­கள் அழி­வ­டைந்து விட்­டன. இத­னால் புதி­தாக வீடு­களை அமைக்க வேண்­டிய தேவை அதி­க­ரித்­துள்­ளது. இங்கு நடை முறைப்­ப­டுத்­தப்­பட்ட வீட்­டுத் திட்­டங்­கள் மக்­க­ளுக்­குப் பூரண திருப்­தியை வழங்­க­வில்லை என்­று­தான் கூற வேண்­டும். ஆகவே வரவு செல­வுத்­திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டுள்ள 50 ஆயி­ரம் கல்­வீ­டு­க­ளை­யும் மக்­க­ளுக்­குச்­சு­மை­யேற்­றாத வகை­யில் அமைக்க வேண்டும்.

முன்­னாள் போரா­ளி­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­புக்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தான அர­சின் அறி­விப்­பும் மகிழ்ச்­சிக்­கு­ரி­யது . அதே­வேளை மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கத்­தின் அபி­வி­ருத்­தி­யும் பாராட்­டு­தற்­கு­ரி­யது.

இது­வரை வேறெந்த அர­சும் வடக்கு மீது காட்­டாத கரி­ச­னை­யைத் தற்­போ­தைய அரசு காட்­டி­யுள்­ளது. அடுத்த ஆண்­டுக்­கான வரவு– செல­வுத் திட்­டத்­தின் மூலம், அரசு அறி­வித்த விட­யங்­கள் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால் வட­ப­குதி சிறப்­பான அபி­வி­ருத்­தி­யைக் காண முடி­யும் என்­பதை உறு­தி­யா­கக் கூற­மு­டி­யும்.

You might also like