வலி இல்லாமல் தற்கொலை செய்ய இயந்திரம்: கருணைக்கொலை ஆர்வலர் அறிமுகம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் புதிய தற்கொலை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே. இவர் அறிமுகப்படுத்தியுள்ள தற்கொலை இயந்திரத்தின் மூலம், ஒரு பொத்தானை அழுத்தினாலே சில நிமிடங்களில் எந்த வலியும் இல்லாமல் உயிர் பிரிந்துவிடும்.

இந்த இயந்திரத்தை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3டி பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்து எங்கு வேண்டுமானாலும் இந்த இயந்திரத்தை ஒன்று சேர்த்து
பொருத்திக் கொள்ளலாம்.

இந்த தற்கொலை இயந்திரத்திற்கு தி சார்கோ கேப்சியூல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை யார் வேண்டுமானாலும், இணையதளம் மூலம் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்னதாக, நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும்.

அதன் முடிவில் நான்கு இலக்க எண் தரப்படும், அதைப் பயன்படுத்தி இயந்திரத்தின் மாடலை பதிவிறக்கம் செய்து, அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம்.

தற்கொலை செய்யப்போகும் ஒருவர், இயந்திரத்தில் அமர்ந்து ஒரு பொத்தானை அழுதியதும், நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில், வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்யும்.

இயந்திரத்தின் மேல் பகுதியை தனியாக பிரித்து எடுத்து, சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

இதுகுறித்து டாக்டர் பிலிப், சார்கோ இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

இதை பயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர் யாராக இருந்தாலும், சார்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றார்.

You might also like