Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

திருக்கார்த்திகைத் தீபம்

கார்த்­திகை மாதம், கார்த்­திகை நட்­சத்­தி­ரத்­தன்று முரு­கன் கோவில்­க­ளில் தீபங்­கள் ஏற்­றிச் சொக்­கப்­பானை கொழுத்தி வழி­ப­டு­வது வழக்­கம். அடுத்த நாள் பௌர்­ணமி தினத்­தன்று ஆல­ யங்­க­ளி­லும் வீடு­க­ளி­லும் தீபம் ஏற்றி வழி­ப­டு­வர்.

சிவ­பெ­ரு­மான் சோதி வடி­வா­கத் தோன்­றி­யதை நினைந்து அடியவர்கள் வழிபாடு இயற்றுவர். சிவ­ராத்­திரி அன்று பிரம்ம விஷ்­ணுக்­க­ளின் அகந்தை நீக்­கச் சோதி வடி­வா­கத் தோன்­றிய இறை­வ­னைப் பிரம்ம விஷ்­ணுக்­கள் தமக்கு என்­றும் காட்­டி­ய­ருள வேண்­டும் என்று வேண்­டி­னர். அதற்கு இறை­வன் திருக்­கார்த்­திகை நாளிலே இவ்­வு­ரு­வி­னைக் காட்­டி­ய­ரு­ளு­வேன் என்று திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­னார். அதனை நினைவு கூர்ந்தே கார்த்­தி­கைத் தீபத் திரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

விளக்­கீட்­டால் வீடு மல­ரும்

திரு­வண்­ணா­ம­லை­யில் மலை­யுச்­சி­யிலே பெருந்­தீ­பம் ஏற்­றப்­ப­டு­கின்­றது. அது பல நாள்­கள் எரி­யும் பெரும் சோதி­யா­கப் பிரவாகித்து பல மைல்­க­ளுக்கு அப்­பா­லும் காட்சிதரும். பல ஊர்­க­ளி­லு­முள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ள் இத­னைத் தரி­சித்து மகிழ்­வார்­கள்.

‘’குன்­றின் மேலிட்ட தீபம்’’ ‘‘மலை விளக்கு’’ என்ற சொற்­றொ­டர்­கள் நீண்ட காலம் இவ்­வ­ழக்­கம் இருந்­த­தை வெளிக்காட்டி நிற்கின்றன. விளக்­கீ­டும் இதன் பொழிப்பே. வீடு­க­ளில் மாக்­கோ­லம், வர்­ணக்­கோ­லம் இட்டு அவற்­றின் மீது விளக்­கு­கள், அகல்­வி­ளக்­கு­களை அறை­கள், விறாந்­தை­கள் முதல் எல்லா இடங்­க­ளி­லும் ஏற்றி வைத்து எங்கும் ஒளிதருவரு இதன் சிறப்பு.

அது மட்­டு­மன்­றிச் சிறு­சிறு பந்­தங்­க­ளைத் தயார் செய்து அவற்றை தேங்­காய் எண்­ணெய் அல்­லது இலுப்­பெண்­ணை­யில் நனைத்து ஏற்றி வீட்டு வள­வு­க­ளில் சுற்­றி­வ­ரப் பல இடங்­க­ளி­லும் நாட்டி வைத்து ஒளிவெள்ளத்தை எங்கும் பாய்ச்சுவர். அத்­து­டன் வீட்டு வாசல்­க­ளில் வாழைக்­குற்­றியை நாட்டி அதன் மேல் தேங்­காய்ப் பாதியை வைப்பர்.

அதனுள் திரிச்­சீலை இட்டு, எண்ணை விட்டு நீண்ட நேரம் எரிய விடு­வர். .அத்­து­டன் வீட்டு மதில்­க­ளில் பல இடங்­க­ளி­லும் சிட்டி விளக்­கு­கள் எரி­யும். அன்று வீடு­க­ளும் வீட்டு வாசல்­க­ளும் ஜெக­ஜோ­தி­யாக விளங்­கும்.

சொக்­கப்­பானை கொழுத்­து­வ­தன் தத்­து­வம்

முன்­னொரு காலத்­தில் தாரகா அர­ச­னு­டைய புதல்­வர்­க­ ளான வித்­யுன்­மாலி, தார­கா­சூ­ரன், மகா­ரா­ஜன் என்ற மூன்று அரக்­கர்­க­ளும் கடு­மை­யான தவம் செய்து மூன்று நக­ரங்­க­ளைப் பெற்­ற­னர். இவை மூன்­றும் முறையே தங்­கம், வெள்ளி, இரும்­பால் ஆகி­யவை. இந்த மூன்று நக­ரங்­க­ளும் தனித்­த­னியே வெவ்வேறு இடங்­க­ளில் இருக்­க­வேண்­டும். என்­றும் ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை இந்த மூவ­ரும் ஒரே ஒரு நிமிட நேரம் ஒன்று சேரு­வ­தென்­றும், அந்த நேரத்­தி­ லேயே அவர்­க­ளுக்கு இறப்­புச் சம்­ப­விக்­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் வரம் பெற்­ற­னர்.

அது­வும் பிறப்­பும் இறப்­பும் அற்ற ஒரு சிறந்­த ஆண் மக­னால், அது­வரை உல­கில் காணக் கிடைக்­காத தேர், குதிரை, சாரதி, வில், அம்பு ஆகி­ய­ வ­கை­க­ளைக் கொண்டு போர் தொடுக்­கும் போது தான் இந்த இறப்­புச் சம்­ப­விக்க வேண்­டும் என­வும், அவர்­கள் வேண்­டிக் கொண்­ட­னர்.

இப்­ப­டிப்­பட்ட ஒப்­பற்ற வரம் பெற்ற அரக்­கர்­களை கைலா­யத்­தைத் தேரா­க­வும் வேதங்­க­ளைக் குதி­ரை­யா­க­வும், பிரம்­மா­வைச் சார­தி­யா­க­வும் , காயத்­தி­ரி­யைக் கடி­வா­ள­மா­க­வும் ஓங்­கா­ரத்­தைச் சாட்­டை­யா­க­வும் மேரு­ம­லையை வில்­லா­ க­வும், ஆதி­சே­டனை நாணா­க­வும், அச்­சு­தனை அம்­பா­க­வும் கொண்டு அவர்­கள் கூடிய ஒரு நிமி­டத்­தில் எரித்து அழித்­தார் சிவ­பெ­ரு­மான். இத­னையே சிவன் திரி­பு­ரம் எரித்த செய்கை என்­றும் கூறு­வர்.
இவ்­வாறு நடந்த நாள் திருக்­கார்த்­திகை தினம் ஆதலால் அதன் பாவ­னை­யா­கச் சொக்­கப்­பானை கொழுத்­தப்­ப­டு­கி­றது.

திருக்­கோ­யி­லுக் கெதி­ரில் பனை ஓலை­க­ளால் கூண்டு கட்டி அதற்­குத் தீயி­டு­வதே சொக்­கப் பானை எரித் தல் எனப்­ப­டு­கி­றது. இத்­தனை சிறப்­பு­கள் பொருந்­திய கார்த்­தி­கைத் தீபத்­தி­ரு­ நா­ளிலே எமது இல்­லங்­க­ளில் தீபங்­கள் ஏற்றி ஆலய தரி­ச­னம் செய்து இறை­வ­ன­ரு­ளால் சகல செல்­வங்­க­ளும் பெற்று பூர­ண­மான, ஆனந்­த­மான வாழ்வை வாழ்­வோ­மாக.