ரோபோக்களால் 800 மில்லியன் போ் வேலையிழப்பு

அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800மில்லியன் தொழிலாளர்கள் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 800 விதமான வேலைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகின் ஐந்தில் ஒரு மடங்கு வேலைகள் ரோபாட்களில் பயன்பாட்டால் பறிபோகும் என்று கண்டறிந்துள்ளது.

ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மற்ற வேலைகளுக்கு தக்கவைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயந்திரங்களை இயக்குபவர்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதன் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை 9 சதவீத வேலைகள் மட்டுமே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடமானத் தொழில் செய்வோர், சட்டம் சார்ந்த பணியாளர்கள், கணக்காளர்கள், மற்றும் அலுவலக உதவிப் பணியாளர்கள் இந்த ரோபோ பெருக்கத்தால் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பர்.

மனித தொடர்புகள் தேவைப்படும் வேலைகளான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மதுபானம் பரிமாறுகிறவர்கள் போன்றவற்றில் தானியங்கிமயத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதென மெக்கன்சி தெரிவித்துள்ளது.

You might also like