பேஸ்புக்கில் புதிய சோதனை!

முகப்புத்தகப் பயனாளிகளிடம் இனி வரும் காலங்களில் அந்த நிறுவனம் கட்டாயமாக செல்பி ஒளிப்படங்களை வெளியிடச் சொல்லும் என்று கூறப்படுகிறது.

சில சோதனைகளை செய்வதற்காக இப்படி ஒளிப்படங்கள் கேட்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை முறை முகப்புத்தகத்தில் புதிய அப்டேட்டில் இருந்த அறிமுகம் ஆக இருக்கிறது. ஏற்கனவே முகப்புத்தக வெப் பயன்படுத்தும் நபர்கள் சிலரிடம் இந்தச் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

முகப்புத்தகத்தின் இந்த புதிய சோதனை முறை காரணமாக பல எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது.

அதன்படி முகப்புத்தக அப் நம்முடைய செல்பி ஒளிப்படத்தை சோதனைக்காகக் கேட்கும். நம்மிடம் செல்பி கேட்டவுடன் உடனடியாக நாம் செல்பி எடுத்து அப்லோட் செய்தால் மட்டுமே நம்முடைய கணக்கு வேலை செய்யும். இல்லையென்றால் முகப்புத்தகம் உடனடியாக நம்முடைய கணக்கை முடக்கிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சோதனை பொய்யான கணக்குகளை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் சில சமயங்களில் கணினி மூலம் சில முகப்புத்தகக் கணக்குகள் ஹேக் செய்யப்படும். அதையும் இதன் மூலம் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சோதனை அனைவரிடமும் செய்யப்படாது என்றும் முகப்புத்தக அப்ளிகேஷனுக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் சோதனை செய்யப்படுவார்கள்.

இந்த சோதனை நீண்ட காலமாக இருந்த பழைய சோதனைக்கு மாற்றாக வந்துள்ளது. ‘கேப்ட்சா’ என்று அழைக்கப்படும் பழைய சோதனையில் பெட்டிக்குள் இருக்கும் குழப்பமான வார்த்தைகளை டைப் செய்ய சொல்லி சோதனை செய்யப்படும்.

இந்த பழைய சோதனையை தொழில்நுட்பத்தை கொண்டு எளிதாக ஏமாற்றவிடலாம் என்பதால் புதிய செல்பி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முகப்புத்தகத்தின் இந்த புதிய சோதனை முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது ஒளிப்படத்தையும் அடையாளத்தையும் வெளியிட விரும்பாத நபர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

You might also like