கூட்டு அர­சின் செயற்­பா­டு­கள் திருப்தியானதல்ல!!

கூட்டு அர­சின் தற்­போ­தைய செயற்­பா­டு­கள் எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தா­கத் தெரி­ய­வில்லை. அர­சின் செயற்­பா­டு­கள் தொடர்­பா­கத் தின­மும் மாறு­பட்ட தக­வல்­கள் வௌிவந்து கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால் மக்­கள் உண்­மை­களை அறிந்து கொள்ள முடி­யாத நிலை­யில் குழம்­பிப்­போய் உள்­ள­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யும் இணைந்து அமைத்­து­து­தான் கூட்டு அரசு. ஆரம்­பத்­தில் எல்­லாமே சரி­யா­கத்­தான் நடந்­து­வந்­தன. ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள் பிளவு ஏற்­பட்­ட­தன் பின்­னர் அர­சி­லும் விரி­சல் ஏற்­பட ஆரம்­பித்து விட்­டது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் அதி­ருப்­திக் குழு­வி­னர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் இயங்கி வரு­கின்­ற­னர். அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­க­ளது முதன்மை நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது.

இவர்­க­ளால் அரச தலை­வ­ரும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார். அர­சைக் காப்­பாற்­று­வதா? அல்­லது கட்­சி­யைக் காப்­பாற்­று­வதா? என்ற மனப்­போ­ராட்­டத்­தில் அவர் சிக்­கித் தவிக்­கின்­றார். சரி­யான முடி­வு­களை எடுக்­க­மு­டி­யாத நிலை­யில் தடு­மா­று­கின்­றார்.

ஊழல் மோச­டி­க­ளுக்கு  எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க தயங்­குகிறது கூட்டு அரசு

இதே­வேளை குற்­றச்­செ­யல்­க ­ளில் ஈடு­பட்­டு, குற்­ற­வா­ளி­க­ ளென அடை­யா­ளம் காணப்­பட்­ட­வர்­க­ளைக்­கூ­டக் கைது செய்து நீதி­யின் முன்­னால் நிறுத்­து­வ­ தற்­குக் கூட இந்த அரசு தயக்­கம் காட்டி வரு­கின்­றது. பிர­பல றகர் விளை­யாட்டு வீரர் தாஜுதீ­னின் சாவு தொடர்­பான ஆதாரங்கள் வெளிவந்­த ­போ­தி­லும், குற்­ற­வா­ளி­கள் இன்­ன­மும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இந்த அர­சின் இய­லா­மையை வௌிப்­ப­டுத்­து­வ­தற்கு இது­வொன்றே போது­மா­னது.

அர­சி­யல் செல்­வாக்­கும்,சமூ­கத்­தில் உயர்ந்த அந்­தஸ்தும் உள்­ள­வர்­க­ளால் குற்­றங்­க­ளில் இ­ருந்து இல­கு­வா­கத் தப்­பித்துக் கொள்ள முடி­கின்­றது. இந்த நிலை­யில் நாட்­டில் நல்­லாட்சி நடப்­ப­தா­கக் கூறு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை.

அண்­மை­யில் அரச தலை­வர் தெரி­வித்த கருத்து தமிழ் மக்­க­ளைப் பெரி­தும் புண்­ப­டுத்­தி­ விட்­டது.‘சமஷ்டி’ அல்­லது கூட்­டாட் சியை ஒரு­போ­துமே தாம் ஆத­ரிக்­கப்­போ­வ­தில்­லை­யென அவர் தெரி­வித்­துள்­ளமை தமி­ழர்­களை ஏமாற்­றத்­துக்­குள் தள்­ளி­விட்­டுள்­ளது.

தனி­நாடு கேட்­டுப் போரா­டிய தமி­ழர்­கள், கூட்டாட்சி முறை நிர்­வா­கம் கூடக் கிட்­டப் போவ­தில்லை என்­பதை அறிந்து கொண்­ட­தும் ஏமாற்­றத்­தின் உச்­சிக்கே சென்­று­விட்­ட­னர். இந்த அர­சு மீது அவர்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யும் தகர்ந்து போய்­விட்­டது.

இரண்டு முதன்மைக் கட்­சி­க­ளும் இணைந்து நிர்­வ­கிக்­கும் அர­சால் நாட்­டின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண வாய்ப்பு உண்டு

கடந்த காலங்­க­ளில் நாட்­டின் முதன்மைக் கட்­சி­கள் எதி­ரும் புதி­ரு­மான கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருந்­தன. இந்­தக் கட்­சி­கள் மாறிமாறி ஆட்­சி­யில் அமர்ந்­தும் கொண்­டன. ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருக்­கும் கட்சி தமி­ழர் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் நோக்­கில் ஏதா­வ­து­தீர்­வுத் திட்­டத்­தைக் கொண்­டு­வ­ரும்­போது எதிர்க்­கட்சி அதை முற்­றா­கவே நிரா­க­ரித்­து­வி­டும்.

மக்­க­ளைத் திரட்டி எதிர்்ப்­புப் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டும். இறு­தி­யில் அந்­தத் தீர்­வுத் திட்­டத்தை நிறை­வேற்ற முடி­யா­மல் போய்­வி­டும். நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து தமிழ் மக்­கள் ஏமாற்­றப்­பட்டு வரு­வ­தற்கு இதுவே முதன்மைக் கார­ண­மா­கும்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிகப்­பெ­ரி­ய­ தொரு அர­சி­யல் மாற்­றம் இந்த நாட்­டில் ஏற்­பட்­டது. முதன்மைக் கட்­சி­க­ளான சிறிலங்கா சுதந்­தி­ ரக்­கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யும், ஒன்­றாக இணைந்து ஆட் சியை அமைத்­துக்­கொண்­டன.

சிறிலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் தலை­வ­ரான மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன அர­ச­த­லை­வர் பத­வியை வகிக்­கின்­றார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை அமைச்­சர் பொறுப்­பில் அமர்ந்­துள்­ளார். இவர்­கள் இரண்­டு­ பே­ரும் இணைந்து நாட்­டில் தீர்வு காணப்­ப­டா­தி­ருக்­கும் தமிழ் மக்­க­ளது இனப்­பி­ரச்­சினை உட்­பட ஏனைய சகல பிரச்­சி­னை­ க­ளுக்­கும் தீர்­வைக்­காண முடி­யும். ஆனால் அவ்­வாறு எது­வுமே இடம் பெற­வில்லை.

நாட்­டின் தேசி­யப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணி­யி­னரே கார­ண­மெ­னக் கூறப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் அரச தலை­வர் தமக்­குள்ள அதி­கா­ரங்­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தன் மூல­மாக எதிர்ப்­புக்­க­ளைச் சமா­ளித்து நல்ல முடி­வு­க­ளைக் காண முடி­யும்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை வகிக்­கும் இரா. சம்­பந்­தன் கூட்­ட­ மைப்­பின் தலை­வர் என்ற வகை­யில் தமிழ் மக்­க­ளின் தலை­வ­ராக விளங்­கு­கின்­றார். இவர் எப்­போ­துமே மித­வா­தக் கொள்­கை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­ப­வர். பேச்­சி­லும், செய­லி­லும் நிதா­னத்­தைக் கடைப்­பி­டிப்­ப­வர். மிகச் சிறந்த பொறு­மை­சா­லி­யெ­னப் பெயர் பெற்­ற­வர்.

அவ­ரது காலத்­தில் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு காணப்­ப­டாது விட்­டால் எப்­போ­துமே அது சாத்­தி­ய­மா­கப் போவ­தில்லை என்­பது அர­சி­யல் ஆய்­வா­ளர்­க­ளின் முடி­வா­கும். அர­சும் இதைப் புரிந்து கொள்ள வேண்­டும்.

உலக நாடு­கள் பல­வற்­றில் நில­வும் பிரச்­சி­னை­க­ளுக்­குக் கார­ணம் இனங்­கள்  மத்­தி­யி­லான பிள­வு­களே

உல­கின் பல நாடு­க­ளி­லும் குழப்­பங்­கள். அர­சு­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­கள் ஏற்­ப­டு­வ­தற்கு அந்­தந்த நாடு­க­ளில் இனங்­க­ளுக்கு இடையே நில­வும் பிரச்­சி­னை­களே மூல கார­ண­மாக விளங்­கு­கின்­றன. அந்த அள­வுக்கு இனப்­பி­ரச்­சினை என்­பது சிக்கலான ஒன்­றா­கும்.

இலங்கை பொரு­ளா­தா­ரம்­ உட்­ப­ட ­ச­க­ல­வ­கை­யி­லும்­பின்­ன­டை­வைச்­சந்­திப்­ப­தற்கு இந்த நாட்­டில் தீர்க்­கப்­ப­டா­தி­ருக்­கும் இனப்­பி­ரச்­சி­னையே கார­ண­மெ­னக் கூற முடி­யும். ஆனால் ஆட்­சிக்கு வரு­ப­வர்­கள் இதை உணர்ந்து கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. கூட்டு ஆட்சி அர­சும் இவ்­வா­று­தான் நடந்து கொள்­கின்­றது.

இனப்­பி­ரச்­சினை விட­யத்­தில் மட்­டு­மல்­லாது நாட்­டின் ஏனைய பிரச்­சி­னை­க­ ளுக்­குக் கூ­டத் தீர்வு காண முடி­யா­மல் திணறி வரு­கின்­றது. இத­னால் அர­சுக்கு எதி­ரா­ன­வர்­கள் உற்­சா­க­ம­டைந்த நிலை­யில் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டின் எதிர்­கா­லத்­துக்கு இது நல்­ல­தொரு அறி­கு­றி­யாக தெரி­ய­வில்லை.

You might also like