நெத்­தன்­யா­குவுக்கு எதி­ராக இஸ்­ரே­லில் ஆர்ப்­பாட்­டம்!

இஸ்­ரேல் தலைமை அமைச்­சர் பெஞ்­ச­மின் நெத்­தன்­யாகு தனது அதி­கா­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­னார் என்று தெரி­வித்து சுமார் 20 ஆயி­ரம் பேர் சாலை­யில் போராட்­டம் நடத்­தி­யுள்­ள­னர்.

யூதர்­க­ளின் நாடான இஸ்­ரே­லின் அதி­ப­ராக இருப்­ப­வர் பெஞ்­ச­மின் நெத்­தன்­யாகு. சமீ­பத்­தில் தொழி­ல­தி­பர் ஒரு­வ­ரி­டம் இருந்து பரி­சுப்­பொ­ருள் பெற்­றார் என்­றும், எதிர்க்­கட்­சி­களை விமர்­சித்து செய்தி வெளி­யிட ஊடக நிறு­வ­னம் ஒன்­றி­டம் பேரம் பேசி­னார் என­வும் குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­க்களை அவர் மறுத்­தி­ருந்­தார். எனி­னும், இஸ்­ரே­லின் தலை­ந­க­ரான டெல் அவிவ் நக­ரின் முக்­கிய பகு­தி­க­ளில் சுமார் 20 ஆயி­ரம் பேர் திரண்டு நெத்­தன்­யா­கு­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

‘‘நெத்­தன்­யா­கு­வுக்கு எதி­ராக நீதி­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட வேண்­டும்’’ என்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like