அல் பக்­தாதி சாக­வில்லை!

‘‘ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பின் தலை­வர் அபு­பக்­கர் அல் பக்­தாதி உயி­ரி­ழக்­க­வில்லை. அவர் உயி­ரு­ட­னேயே உள்­ளார்’’ என்று ஈராக் இரா­ணு­வம் தெரி­வித்­தது.

ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்றி அவற்றை ஒரு தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக், சிரிய இஸ்­லா­மிக் ஸ்ரேட்) அமைப்பு. அந்த அமைப்­பின் தலை­வ­ராக அபு­பக்­கர் அல் பக்­தாதி உள்­ளார்.

அவரை கடந்த 2011ஆம் ஆண்டு தேடப்­ப­டும் மோச­மான தாக்­கு­தல்­தா­ரி­யாக அமெ­ரிக்கா அறி­வித்­தது. அவ­ரது தலைக்கு சுமார் 25 மில்­லி­யன் டொல­ரை­யும் நிர்­ண­யித்­தது.

இந்த நிலை­யில், சிரி­யா­வில் ராக்கா நகர் அருகே சுகோய் ரக போர் விமா­னங்­கள், கடந்த மே மாதம் 28ஆம் திகதி இரவு நடத்­திய குண்­டு­வீச்­சில் அல் பாக்­தாதி கொல்­லப்­பட்­டார் என்று ரஷ்யா அறி­வித்­தி­ருந்த நிலை­யில் இதை ஈராக் இரா­ணு­வம் தற்­போது மறுத்­துள்­ளது.

‘‘எங்­க­ளுக்குக் கிடைத்­துள்ள மிகத் துல்­லி­ய­ மான தக­வல்­க­ளின்­படி அல் பக்­தாதி, ஈராக்­கின் எல்­லைப்­புற நக­ர­மான அல் காயிம், சிரி­ யா­வின் அபு கமால் நக­ரங்­க­ளுக்கு இடையே உள்ள பாலை­நி­லப் பகு­தி­க­ளில் பதுங்­கி­யுள்­ளார்’’ என்று ஈராக் இரா­ணு­வம் மேலும் தெரி­வித்­தது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like