தென்­கொ­ரி­யா­வில் பட­கு­ வி­பத்து – 13 மீன­வர்­கள் பரி­தா­பச் சாவு!

தென்­கொ­ரி­யா­வில் மீன்­பிடிப் பட­கொன்று விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர். நேற்­று­முன்­தி­னம் இந்­தத் துய­ரச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

தென்­கொ­ரி­யா­வின் மேற்குக் கட­லோரப் பகு­தி­யில் உள்ள இன்­சி­யான் என்ற இடத்­தி­லேயே இந்த விபத்து இடம்­பெற்­றது.

பட­கில் 22 மீன­வர்­கள் இருந்­த­னர். அந்த வழி­யாக வந்த எரி­பொ­ருள் நிரப்­பும் கப்­பல் மீது மீன்­பி­டிப் படகு எதிர்­பா­ரா­த­வி­த­மாக மோதி­யதை அடுத்தே இந்த அசம்­பா­வி­தம் ஏற்­பட்­டது. 7 பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­னர்.

இரு­வரைக் காண­வில்லை. நேற்று மதி­யம் வரை அவர்­கள் தொடர்­பில் எந்­தத் தக­வ­லும் இல்லை. இத­னால் காண­மல் போனோ­ரின் நிலமை தொடர்­பில் கவலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like