அபு­தா­பி­யின் அணு­மின் நிலை­யத்தை தாக்­கி­ய­தாக அறி­வித்­தது ஹெளதி

அபு­தா­பி­யில் சுமார் 5 ஆயி­ரம் கோடி அமெ­ரிக்க டொலர் செல­வில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் அணு­மின் நிலை­யத்தை தாக்­கி­ய­தாக ஹெளதி ஆயு­தக் குழு அறி­வித்­தது.

அபு­தா­பி­யின் மேற்கு பகு­தி­யில் பராக்கா அணு மின்­சார நிலை­யம் அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த அணு­மின் நிலை­யமே தம்­மால் தாக்­கப்­பட்­டது என்று ஹெளதி அறி­வித்­துள்­ளது.

ஹெள­தி­யின் அறி­விப்­புக்கு அபு­தா­யின் தரப்­பில் இருந்து எந்­தப் பதி­லும் நேற்று மாலை வரை வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏமன் அதி­பர் அலி அப்­துல்லா சாலே ஆட்­சிக்கு முடிவு கட்­டும் வகை­யில் அங்­குள்ள ஹெளதி ஆயு­தக் குழு போரிட்டு வரு­கி­றது. தலை­ந­கர் சனா­வில் தற்­போது கடும் போர் நடை­பெற்று வரு­கி­றது. ஏம­னுக்கு சவூதி தலை­மை­யி­லான கூட்­டுப் படை­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

அவற்­றில் அபு­தா­பி­யும் ஒன்று. இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே அபு­தா­பியை நோக்கி ஹெளதி தனது ஏவு­க­ணையை அனுப்­பி­ய­தா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like