ஆஸ்திரேலிய அணி மேலும் முன்னிலை!

ஆஷஸ் தொட­ரின் இரண்­டா­வது ஆட்­டத்தின் நேற்­றைய மூன்­றாம் நாள் நில­வ­ரத்­தின்­படி ஆஸ்­தி­ரே­லிய அணி மேலும் முன்­னிலை பெற்­றது.

பக­லி­ரவு டெஸ்ட் ஆட்­ட­மாக அடி­லெய்­டில் இந்த ஆட்­டம் நடை­பெற்று வரு­கி­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸ்­தி­ரே­லிய அணி 8 இலக்­கு­களை இழந்து 442 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை நிறுத்­தி­யது. அதி­க­பட்­ச­மாக ஷோன் மார்ஷ் 126 ஓட்­டங்­க­ளை­யும், பெய்ன் 57 ஓட்­டங்­க­ளை­யும், கவாயா 53 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஓவர்­டன் 4இலக்­கு­க­ளை­யும், புரோட் 2 இலக்­கு­க­ளை­யும், அன்­டர்­சன், வோக்ஸ் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இங்கிலாந்து அணி ஓர் இலக்கை இழந்து 29 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் நேற்று­முன்­தின இரண்­டாம்­நாள் முடி­வுக்கு வந்­தது. குக் 11 ஓட்­டங்­க­ளு­ட­னும் வின்ஸ் ஓட்­ட­மெ­தை­யும் பெறாத நிலை­யி­லும் மூன்­றாம் நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னர். 2 ஓட்­டங்­க­ளு­டன் வின்ஸ் ஆட்­ட­மி­ழந்­தார். ரூட், மலன் இரு­வ­ரும் ஏமாற்­றி­னர்.

தவற விடாதீர்கள்:   கவுண்டி  ஆட்டத்தில் வில்லியம்சன்

இலக்­குச் சரிவு தொடர்ந்­தது. முடி­ வில் 227 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு க­ளை­யும் இழந்­தது இங்­கி­லாந்து. ஓவர்­டன் 41 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தார்.

பந்­து­வீச்­சில் லையன் 4 இலக்­கு­க­ளை­யும், ஸ்ராக் 3 இலக்­கு­க­ளை­யும், கம்­மின்ஸ் 2 இலக்­கு­க­ளை­யும், ஹசில்­வூட் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

215 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு­டன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது ஆஸ்­தி­ரே­லிய அணி. இங்­கி­லாந்­தின் வேகப்­பந்­து­வீச்சு திடீர் எழுச்­சி­காண நாள் முடி­வில் ஆஸ்­தி­ரே­லியா 4 இலக்­கு­களை இழந்து 53 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுள்­ளது. தற்­போ­தைய நில­வ­ரத்­தின்­படி ஆஸ்­தி­ரே­லியா 268 ஓட்­டங்­கள் முன்­னி­லை ­யில் உள்­ளது.

You might also like