சந்திமல், மத்தியூஸ் பொறுப்பான ஆட்டம்!

இந்தியா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் ஆட்­டத்­தின் மூன்­றாம் நாளான நேற்று முழு­வ­து­மா­கத் தாக்­குப்­பி­டித்­தது இலங்கை அணி.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்று முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர் மானித்­தது இந்­திய அணி. அந்த அணி 7 இலக்­கு­களை இழந்து 536 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­து­வ­தாக அறி­வித்­தார் கோக்லி.

அதி­க­பட்­ச­மாக கோக்லி 243 ஓட்­டங்­க­ளை­யும், முரளி விஜய் 155 ஓட்­டங்­க­ளை­யும், ரோகித் சர்மா 65 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் சன்­ட­கன் 4 இலக்­கு­க­ளை­யும், கமகே 2 இலக்­கு­க­ளை­யும், டில்­ரு­வான் பெரேரா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இலங்கை அணி நேற்­று­முன்­தின இரண்­டாம் நாள் முடி­வில் 3 இலக்­கு­களை இழந்து 131 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. மத்­தி­யூஸ் 57 ஓட்­டங்­க­ளு­ட­னும், சந்­தி­மல் 25 ஓட்­டங்­க­ளு­ட­னும் மூன்­றாம் நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னர்.

இணைப்­பாட்­டம் நீண்டு நிலை­பெற்­றது. இலங்­கை­யில் உள்ள இரண்டு அனு­பவ வீரர்­கள் என்ற வகை­யில் சந்­தி­மல் மற்­றும் மத்­தி­ யூஸ் இரு­வ­ரி­ன­தும் ஆட்­டம் திருப்தி தரக்­கூ­டிய வகை­யில் அமைந்­தது. இரு­வ­ரும் சதம் கடந்­த­னர்.

தவற விடாதீர்கள்:  விடைபெறுகிறார் கெவின் பீற்றர்சன்

இணைப்­பாட்­ட­மாக 181 ஓட்­டங்­கள் பகி­ரப்­பட்ட பின்­னர் 111 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் மத்­தி­யூஸ். சம­ர­விக்­கி­ரம 33 ஓட்­டங்­க­ளு­டன் பவி­லி­யன் திரும்­பி­னார். சில்வா, டிக்­வெல்ல இரு­வ­ரை­யும் ஓட்­ட­மெ­தை­யும் பெற­வி­டாது பவி­லி­ய­னுக்­குத் திருப்­பி­னார் அஸ்­வின்.

லக்­மலை 5 ஓட்­டங்­க­ளு­டன் வீழ்த்­தி­னார் சமி. கம­கே­வால் முடிந்­தது வெறும் ஓர் ஓட்­டம் மட்­டுமே. திடீர் சரி­வு­கண்­டது இலங்கை. நாள் முடி­வில் 9 இலக்­கு­களை இழந்து 356 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுள்­ளது இலங்கை. சந்­தி­மல் 147 ஓட்­டங்­க­ளு­டன் களத்­தில் உள்­ளார்.

You might also like