இலங்கை அணி மீது வேண்டும் நடவடிக்கை– சேவாக் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் காற்­று­மாசு கார­ண­மாக மூன்று முறை ஆட்­டம் தடைப்­பட்­டது. இந்த விவ­கா­ரத்­தில் இலங்கை வீரர்­களை கடு­மை­யா­கச் சாடி­யுள்ள இந்­திய அணி­யின் முன்­னாள் வீரர் சேவாக், இலங்கை வீரர்­க­ளுக்கு எதி­ராக நட­ வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

‘‘இலங்கை வீரர்­கள் இரண்டு நாள்க­ளாக மைதா­னத்­தில் பயிற்சி செய்­த­னர். அப்­போ­தும் காற்று மாசு­பாடு அதி­க­மா­கவே இருந்­தது. வீரர்­கள் விளை­யா­டு­வ­தற்கு தகுந்த சூழ்­நி­லை­யில்லை என்­றால் விளை­யா­டா­மல் இருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் விளை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும் போது இடையே இது போன்ற பிரச்­சி­னையை எழுப்­பு­வது சரி­யன்று. அவர்­கள் இந்­திய வீரர்­க­ளுக்கு தொந்­த­ரவு கொடுக்­கவே இது­போன்ற காரி­யங்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். விராட் கோக்­லி­யின் ஓட்­டங்­க­ளைக் குறைப்­ப­தற்­காக இந்த முயற்சி நடந்­துள்­ளது. இலங்கை வீரர்­கள் விளை­யாட்டு வீரர்­க­ளைப்­போல் நடந்துகொள்­ள­வில்லை’’ என சேவாக் மேலும் தெரி­வித்­தார்.

You might also like