இன்னிங்ஸால் வெற்றிபெற்றது நியூசிலாந்து

மேற்­கிந்­தி­யத் தீவு­க­ளுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இன்­னிங்ஸ் வெற்­றி­பெற்­றது நியூ­சி­லாந்து அணி.

நியூ­சி­லாந்து – மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டம் வெலிங்­ட­னில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற நியூ­சி­லாந்து முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தி­யத் தீவு­கள் 134 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

அதி­க­பட்­ச­மாக பவல் 42 ஓட்­டங்­க­ளை­யும், பிரீத்­வைட் 24 ஓட்­டங்­க­ளை­யும், டவ்­ரிச் 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் வாக்­நெர் 7 இலக்­கு­க­ளை­யும், போல்ட் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­சி­லாந்து அணி 9 இலக்­கு­களை இழந்து 520 ஓட்­டங்­க­ளைக் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.

அதி­க­பட்­ச­மாக பண்­டெல் 107 ஓட்­டங்­க­ளை­யும், கிரான்ட்­ஹோம் 105 ஓட்­டங்­க­ளை­யும், ரெய்­லர் 93 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் றோச் 3 இலக்­கு­க­ளை­யும், கம்­மின்ஸ், சேஸ் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும், கோல்­டர், கபி­ரி­யேல் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

386 ஓட்­டங்­கள் பின்­னி­லை­யு­டன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது மேற்­கிந்­தி­யத் தீவு­கள். நேற்­று­முன்­தின மூன்­றாம்­நாள் முடி­வில் மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி 2 இலக்­கு­களை இழந்து 214 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. பிரீத்­வைட் 79 ஓட்­டங்­க­ளு­ட­னும், கோப் 21 ஓட்­டங்­க­ளு­ட­னும் நான்­காம் நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னர்.

தவற விடாதீர்கள்:  ஒரு நாள் தொடர் ஆரம்பமாகிறது இன்று

37 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் கோப். ஓர் முனை­யில் பிரீத்­வைட் நிலைத்­து­நின்­றா­லும் மறு­மு­னை­யில் இலக்­கு­கள் சரிந்­து­கொண்டு சென்­றன. டவ்­ரிச், கோல்­டர், றோச் மூவ­ரும் முறையே 3, 7, 7 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­த­னர்.

பிரீத்­வைட் 91 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்க 319 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது மேற்­கிந்­தி­யத் தீவு­கள். இன்­னிங்­ஸா­லும் 67 ஓட்­டங்­க­ளா­லும் வெற்­றி­பெற்­றது நியூ­சி­லாந்து. பந்­து­வீச்­சில் ஹென்றி 3 இலக்­கு­க­ளை­யும், போல்ட், கிரான்ட்­ஹோம், வாக்­நெர் மூவ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும், சான்­நெர் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like