இணைச் சம்பியன் அணிகள் தெரிவு

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் நலன்­பு­ரிக் கூட்­டு­ற­வுச் சங்­கம் நடத்திய பல்­க­லைக் கழக ஊழி­யர்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் அணி, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக சுகா­தா­ரத் திணைக்­கள அணி ஆகி­யன இணைச் சம்­பி­ய­னா­கின.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்­றுமுன்­தி­னம் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் பல்க­லைக் கழக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் அணியை எதிர்த்து யாழ்ப்­பாணப் பல்­க­லைக்கழக  சுகா­தா­ரத்   திணைக் கள அணி  மோதி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லா­வது செற்றை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக சுகா­தா­ரத் திணைக்­கள அணி 15:10 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது.

இரண்­டா­வது செற் ஆட்­டத்தை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் அணி 15:3 என்ற புள்­ளிக­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது. வெற்­றி­யா­ள­ரைத் தீர்­மா­னிப்பதற் கான மூன்­றா­வது செற்­றின் போது மழை குறுக்­கி­ட்டதை அடுத்து இரண்டு அணி­க­ளும் இணைச்­சம்­பி­ய­னாக அறி­விக்­கப்­பட்­டன.

தவற விடாதீர்கள்:  சக்குரா கராத்தே கழகத்துக்கு தேசியமட்டத்தில் பதக்கங்கள்

You might also like